news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கூரை சீமெந்துத் தளம் சரிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி

25 Aug, 2020
வீடு திருத்த வேளையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். சுன்னாகம், அம்பனைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. நவாலி கலையரசி லேனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுனனாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!