உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
வலியோடு அந்த யானை அருகில் உள்ள கிராமத்தின் வீதிகளில் உதவிக்காக சுற்றி திறிந்தபோது கூட, ஒரு மனிதரையும் அது தாக்கவில்லை என்று உணர்ச்சிபூர்வமாக அவர் எழுதியிருந்தார்.
அந்த கர்ப்பிணி யானையில் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
"வலியுடன் தண்ணீரில் நின்று கொண்டிருந்த யானையை மீட்க, விரைவுக்குழுவோடு, இரண்டு கும்கி யானைகளையும் பயன்படுத்தினோம். அங்கிருந்து யானையை வெளியே கொண்டுவந்தால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், அந்த யானை அதற்கு ஒத்துழைக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யும் முன் இறந்துவிட்டது," என பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பிரிவு வன அலுவலர் சுனில் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
மே 27ஆம் தேதியன்று தண்ணீரில் நின்றபடியே அந்த யானை இறந்திருக்கிறது. பின்னர் அதன் உடல் அருகில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
அப்போதுதான் அந்த யானை கர்ப்பமாக இருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பின்னர் அந்த யானை புதைக்கப்பட்டு, அதற்கு இறுதி மரியாதையையும் அதிகாரிகள் செலுத்தினர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய சாமுவேல், இதற்கு யார் காரணம் என்பதை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் மனித - விலங்கு மோதல் சம்பவங்கள் இதற்கு முன்னரே பல முறை நிகழ்ந்திருந்தாலும், இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!