உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
நரபலி கொடுக்கப்பட்ட வீட்டு வளாகத்தில் மோப்பாய் சோதனை
மேலும் பெண் உருவம் போன்ற டம்மி உடல் ஒன்றை பகவல் சிங்கின் வீட்டுக்கு கொண்டு சென்று நரபலி கொடுத்தது எப்படி என்பதை லைவாக செய்யவைத்து மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
ஃப்ரிட்ஜில் ரத்தம் எப்படி வந்தது என லைலாவிடம் கேட்டதற்கு, நரபலி கொடுத்ததில் சுமார் 10 கிலோ இறைச்சியை பிரிட்ஜில் இரண்டு நாள்களாக வைத்திருந்தாக அவர் கூறியுள்ளார்.
சமைத்த மனித இறைச்சியை சாப்பிட பகவல் சிங் மறுத்திருக்கிறார். இதனால், லைலா அவரது வாயில் இறைச்சியை திணித்துள்ளார். ஆனால், பகவல்சிங் இறைச்சியை துப்பிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் முஹம்மது ஷாஃபியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாஃபி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ``ஸ்ரீதேவி என்ற போலி ஃபேஸ்புக் ஐ.டி மூலம் பகவல் சிங்கிடம் பெண் போன்று பழகியுள்ளார் ஷாஃபி.
அது பெண்தானா என்பதை கண்டறிய மெசேஞ்சரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்படி பகவல் சிங் கூறியுள்ளார்.
கிரிமினலாக யோசித்த ஷாஃபி எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பேச வைத்து மெசேஞ்சர் மூலம் சில வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
லைலா, பகவல் சிங்
முதலில் செல்வம் பெருக என சாதாரண பூஜைகளை செய்து நடித்துள்ளார் முஹம்மது ஷாஃபி. அப்போது சிறிது சிறிதாக பகவல்சிங் தம்பதியிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாய் வரை ஷாஃபி வாங்கியுள்ளார்.
அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, இவர்களை கொலை வழக்கில் சேர்த்துக்கொண்டால் ஏற்கனவே வாங்கிய பணத்தை கேட்கமாட்டார்கள்,
மிரட்டி கூடுதல் பணம் பறிக்கலாம் என ஷாஃபி திட்டமிட்டிருக்கிறார். அதற்காகத்தான் நரபலி பூஜை என்ற ஐடியாவை சொல்லியிருக்கிறார்.
நரபலி கொடுத்தால் பலன் கிடைக்குமா என ஸ்ரீதேவி ஃபேஸ்புக் ஐ.டி-யிடம் சந்தேகம் கேட்டுள்ளார்.
நான் அப்படி பூஜை செய்து பலன் கிடைத்தது என ஸ்ரீதேவி ஃபேஸ்புக் ஐடி-யில் இருந்து பதில் வந்துள்ளது. அதை நம்பி நரபலிக்கு தயாராகியுள்ளார் பகவல் சிங்.
நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லி, பத்மா
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!