news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொடிகாமத்தில் தனியார் பேருந்து - ஹயஸ் வாகனம் மோதி விபத்து : பலர் காயம்!

25 Jun, 2023
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் (25) மதியம் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலரும் சிக்கி காயமடைந்துள்ள நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸார் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!