கொம்புசீவி விமர்சனம்: சரத்குமார் – ஷண்முக பாண்டியன் காம்போ காமெடியில் கவர்ந்ததா?
கொம்புசீவி
Kombuseevi Movie Review
இயக்கம் : பொன்ராம்
நடிப்பு : ஷண்முக பாண்டியன், சரத்குமார், லைலா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம், தொடர் தோல்விகளுக்குப் பிறகு கம்பேக் தருவாரா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.
அதேபோல், தன் தந்தையின் கனவை நிறைவேற்றும் முயற்சியில் இருக்கும் ஷண்முக பாண்டியனுக்கும் இது முக்கியமான படம்.
இந்த கூட்டணியில் உருவான ‘கொம்புசீவி’ எப்படியுள்ளது என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்
சரத்குமார் “ரொக்கபுலி” என்ற பெயரில் ஊரில் பெரிய கட்டபஞ்சாயத்து செய்பவராக வருகிறார். ஊரில் எந்தப் பிரச்சினை வந்தாலும் முன்னால் நிற்பவர்.
அவரால் சிறு வயதில் பெற்றோரை இழந்த ஷண்முக பாண்டியன் வளர்க்கப்படுகிறார்.
இந்த ஊர் போதைப் பொருள் கடத்தலுக்குப் பெயர் போனது.
அதை கட்டுப்படுத்த போலீஸ் அதிகாரியாக லைலா ஊருக்கு வருகிறார். வந்த உடனே அதிரடி காட்டும் லைலா, 10 கிலோ போதைப் பொருளை கைப்பற்றுகிறார்.
ஆனால், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அந்த போதைப் பொருள் மர்மமாக காணாமல் போகிறது.
இதனால் லைலா, ஷண்முக பாண்டியனின் உதவியை நாடுகிறார்.
அவர் அதற்குப் பதிலாக 10 கிலோ போதைப் பொருளை தயார் செய்து கொடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் லைலா, ஷண்முக பாண்டியனை கையும் களவுமாக பிடிக்கிறார்.
இதன் பிறகு அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஷண்முக பாண்டியன் கிராமத்து நாயகனாக மீண்டும் ஒரு முறை ஸ்கோர் செய்கிறார்.
ஆக்ஷன், காமெடி டயலாக் டெலிவரி ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
டான்ஸ் மற்றும் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மேம்பாடு தேவை.
படத்தின் மிகப் பெரிய பலம் சரத்குமார்.
செகண்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து மிரட்டும் நடிப்பு.
ஊரின் பெரிய மனிதன் கதாபாத்திரத்தை இயல்பாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் செய்துள்ளார்.
படத்தின் மையம் போதைப் பொருள் கடத்தல் என்பதால் கதாபாத்திரங்களுடன் பெரிய எமோஷனல் கனெக்ஷன் உருவாகவில்லை.
அதனால் பல காட்சிகள் நம்மிடம் ஒட்டாமல் போகிறது.
மலையில் ஒளியும் காட்சி, நீதிமன்ற ரகளை, பூசாரி கேரக்டர், சுயபுகழ் பேசும் கதாபாத்திரம் என பொன்ராம் டச் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.
ஆனால், முழுக்க காமெடியாக செல்லும் படம் திடீரென ஹெவி எமோஷனல் ட்ராக் எடுத்துக்கொள்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
“காமெடியாகவே போயிருக்கலாமே” என்ற எண்ணம் வருகிறது.
ஒளிப்பதிவு கிராமத்து சூழலை அழகாக காட்டுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடல்களிலும் பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார்.
Claps
-
சரத்குமார் – ஷண்முக பாண்டியன் காம்போ
-
சில காமெடி காட்சிகள்
-
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை
Blips
-
இரண்டாம் பாதை தெளிவில்லாமல் நகர்வது
-
கிளைமேக்ஸ் பலவீனம்
Verdict
பொன்ராமுக்கு முழுமையான கம்பேக் இல்லை.
ஆனால், ஷண்முக பாண்டியனுக்கு இது ஒரு ஆறுதல் படம்.
Rating : 2.5 / 5

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!