news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொரோனா அதிகம் பரவிய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்

08 Sep, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 74 லட்சத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 74 லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 802 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று 25 ஆயிரத்து 317 பேருக்கும், பிரேசிலில் 10 ஆயிரத்து 188 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70 லட்சத்து 9 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 337 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 95 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:- அமெரிக்கா - 64,85,567 இந்தியா - 42,04,614 பிரேசில் - 41,47,794 ரஷியா - 10,30,690 பெரு - 6,89,977 கொலம்பியா - 6,71,848 தென் ஆப்பிரிக்கா - 6,39,362 மெக்சிகோ - 6,39,362 ஸ்பெயின் - 5,25,549 அர்ஜெண்டினா - 4,88,007

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!