திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். கொரோனா காலத்தில், அதாவது 2020ம் ஆண்டு, பெரிதாக யாரையும் அழைக்காமல் டாக்டர் ஹிமானி சிங்கை பிரபுதேவா திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அது குறித்து பிரபுதேவா யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் தற்போது முதல் முறையாகத் தனது இரண்டாவது மனைவியுடன் பிரபுதேவா திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளார்.
மனைவியுடன் பிரபுதேவா
திருப்பதியில் தனது இரண்டாவது மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு அவருக்குப் பாதுகாப்பாகச் சென்றார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி இருக்கிறது.
பிரபுதேவாவின் பிறந்த நாளையொட்டி ஹிமானி சிங் சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தனது கணவரை ஹிமானி வெகுவாகப் புகழ்ந்துள்ளார். பிரபுதேவா, தன்னை மிகவும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாகவும் அவரைத் திருமணம் செய்து கொண்டதற்காகப் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபு தேவா தன்னுடைய 50 பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.
அப்போது பிரபு தேவாவின் இரண்டாவது மனைவி வீடியோ மூலம் தோன்றி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அப்போது பேசிய அவர், "உங்களை திருமணம் செய்து 3 ஆண்டுகள் வாழ்ந்து வருகிறேன்.
உங்களுடைய ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நீங்கள் எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளீர்கள்.
உங்களை திருமணம் செய்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதற்காக நான் கடவுளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஐ லவ் யூ “ என பேசி உள்ளார்.
Voir cette publication sur Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!