பெண் வெட்டிக்கொலை; ஆண் தொங்குகின்றார்
05 Nov, 2026
இவ்வாறான பின்னணியில், இலங்கையில் மூன்றாவது கோவிட் கொத்தணி அச்சுறுத்தல் நிலவிவரும் இந்த சந்தர்ப்பத்தில், சீன உயர்மட்ட தூதுக்குழுவை இலங்கைக்கு பிரவேசிக்க நேற்று முன்தினம் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் விவகார உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளிவிவகார அலுவலகத்தின் பணிப்பாளருமான யாங் ஜீச்சி தலைமையிலான 26 உறுப்பினர்களை கொண்ட குழுவே இலங்கைக்கு அவசரமாக பயணத்தை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்த சீன குழு, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டிற்குள் எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றது என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தன.
நாட்டிற்கு வருகைத் தரும் தூதுக்குழு உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மாத்திரம் நடத்தப்பட்டு, நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் பதிலளித்திருந்தார்.
தனிமைப்படுத்தல் சட்டம் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் சீன தூதுக்குழுவிற்கு அமல்படுத்தப்படாமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்த பின்னணியில், அவர்கள் நாட்டிற்குள் வருகைத் தந்திருந்தனர்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுக்குழு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினரை நேற்று சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு
ஆசியாவின் 4 நாடுகளுக்கான தமது பயணத்தில், முன்னுரிமை வழங்கி, இலங்கைக்கே முதற்தடவையாக வருகைத் தந்ததாக சீன தூதுக்குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை வழங்குமாறு, சீன ஜனாதிபதி கூறியிருந்ததாகவும் ஜனாதிபதியிடம், சீன தூதுக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர பாரிய உதவிகளை சீனா வழங்கியிருந்ததாகவும், யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா பாரிய உதவிகளை வழங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், தெற்கு அதிவேக வீதி உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகளை சீனா கொள்வனவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், சீன சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட சீன தூதுக்குழு, இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்க இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தையை மீள ஆரம்பித்தல் மற்றும் உத்தேச ஹம்பந்தோட்டை தொழில்பேட்டை திட்டத்தை விரைவில் நிறைவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
கோவிட் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு தூதுக்குழு, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது
அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உள்ளிட்ட சர்வதேச விடயங்களில் இலங்கைக்கு சார்பாகவே சீனா செயற்படும் எனவும் சீன உயர்மட்ட தூதுக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
பிரதமருடனான சந்திப்பு
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று, தெற்காசியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், சீன உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.
தெற்காசியாவில் இலங்கைக்கு முதலாவதாக விஜயம் செய்வதன் ஊடாக இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த குழுவினர் கூறியுள்ளனர்.
இலங்கைக்கான முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், முதலீட்டாளர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து கருத்து வெளியிட்ட சீன உயர்மட்ட குழுவின் தலைவர் யாங் ஜீச்சி, வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ளும் போது, சீன அரசாங்கம் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கும் என கூறியுள்ளார்.
இலங்கை கோவிட் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சீனாவிற்கு ஆதரவானவர்கள் என கூறப்படும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சிக்கு வந்துள்ள நிலையிலும், சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு சுகாதார நடைமுறைகளை தளர்த்தி வருகைத்தந்தமை இலங்கை - சீனாவிற்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!