கொரோனா பலி எண்ணிக்கை 32,000 ஐ கடந்தது! 683,937 பேருக்குத் தொற்று, 146,400 பேர் குணப்படுத்தப்பட்டனர்
இன்று இரவு வெளியான தகவல்களின்படி, உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 683,937 ஆக அதிகரித்திருந்தது,. இவர்களில் 32,162 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 146,400 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.
இத்தாலியில் கொரோனாவினால் நேற்று 889 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 92,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது இவர்களில் 12,384 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்பெய்னில் மேலும் 546 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு பலியானோர் எண்ணிக்கை 6,528 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 78,797 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 14,709 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் இன்று 3 புதிய மரணங்களும் 45 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன. புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்வர்களில் 44 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மொத்தமாக 81,439 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இவர்களில் 3300 பேர் இறந்துள்ளனர். அதேவேளை, 75448 பேர் குணமடைந்துள்ளனர்.
ஈரானில் கொரோனா வைரஸினால் மேலும் 123 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை 2,640 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 38,309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 12,391 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் அமெரிக்காவில் 123,898 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2,231 பேர் இறந்துள்ளனர். 3,248 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் கொரோனா வைரஸினால் 2,314 பேர் இறந்துள்ளனர். அங்கு 37575 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 5,700 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் 1,228 பேர் இறந்துள்ளனர். 19,522 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!