பெண் வெட்டிக்கொலை; ஆண் தொங்குகின்றார்
05 Nov, 2026
நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது - ஜனாதிபதி
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் கூட்டறிக்கை விட்டமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 70(7) சரத்தின் கீழ் செயற்படுவதற்கான தேவை ஏற்படவில்லை என ஜனாதிபதி அறிவிக்குமாறு தனக்கு அறிவுறுத்தல் விடுத்ததாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.
அலரிமாளிகை கூட்டத்தை நிராகரிக்கும் எதிர்க்கட்சிகள்
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைக்கு மத்தியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமரின் செயலாளர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இதன்படி, பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் எதிர்வரும் 4ஆம் தேதி முற்பகல் 10 மணிக்கு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் கூட்டுவதற்கான அதிகாரம் காணப்படுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டாது அலரி மாளிகையில் தனியாக கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றமை தவறானது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இதற்கமைய, அலரி மாளிகை கூட்டத்தில் தாம் கலந்து கொள்ள போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
அரசியலமைப்புக்கு அமைய நடவடிக்கைகளை எடுக்காததன் ஊடாக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுகின்றமை எந்தவித பயனும் கிடையாது என தாம் நம்புவதாகவும் இந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கான பொது பொறிமுறையொன்றை தயாரிக்குமாறு தமது கட்சி உள்ளிட்ட பலர் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், அவ்வாறான ஒன்றை தயாரிப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காத பின்னணியில் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளமை பயனற்றது எனவும் அந்த கட்சி கூறுகின்றது.
பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இந்த கூட்டம் கூட்டப்படும் என்றால், அதற்கு சரியான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி பட்டியலிட்டுள்ளது.
01.அரசியலமைப்பின் பிரகாரம், அவசர நிலைமையாக கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும்.
02.இவ்வாறான நிலைமையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அரசியலமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி நிராகரிப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் எதிர்வரும் 4ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது அணி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி கவனத்திற் கொள்ளாது நிராகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி, நிற பேதமின்றி இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியே அந்த கடிதத்தை தாம் அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அலரிமாளிகை கூட்டம் நிச்சயம் நடைபெறும் - பிரதமர் உறுதி
யார் வந்தாலும், வராவிட்டாலும் தீர்மானிக்கப்பட்ட விதத்தில் கூட்டம் நடத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
இந்த பிரச்சனைக்கு சிலர் வராதவிடத்து, அவர்கள் மக்கள் பிரச்சனைகளை பேச விருப்பமில்லாதவர்கள் என எண்ணம் வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!