கொலரா அச்சம்: மீன்பிடி படகில் தப்பிக்க நினைத்த மக்கள்… நீரில் மூழ்கி 91 பேர் பலி !
கிழக்கு ஆபிரிக்காவின் மொசாம்பிக் (Mozambique) நாட்டின் நம்புலா மாநிலத்தில் கொலரா பற்றிய தவறான தகவல்களால் ஏற்பட்ட பீதியின் காரணமாக, மக்கள் அந்த நிலப்பகுதியிலிருந்து வெளியேற முயன்றுவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாகவே ஒரு கோரசம்பவம் நடந்திருக்கிறது.
மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரை மாநிலமான நம்புலாவிலிருந்து சுமார் 130 பேரை ஏற்றிக்கொண்டு மீன்பிடிப் படகு ஒன்று புறப்பட்டிருக்கிறது.
அந்தப் படகில் அளவுக்கு மீறிய நபர்களை ஏற்றியிருக்கவே கூடாது. ஆனால், அளவுக்கு மீறிய பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கப்பல் மூழ்கத் தொடங்கியிருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 91 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்திருக்கிறது.
இதுதொடர்பாக பேசிய நம்புலா மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ,
“படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமில்லாமல் இருந்ததாலும் படகு மூழ்கியதாக அறிகிறோம். பல குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் ஐந்து பேரை உயிருடன் மீட்டிருக்கின்றனர். பலரைத் தேடி வருகிறோம்.
ஆனால் கடல் நிலைமைகள் மீட்புப்பணியைக் கடினமாக்குகிறது. படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!