news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுவனக்கு நேர்ந்த கதி

02 Oct, 2025
கொழும்பு Swimming Clubஇல் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்ததில் 8 வயது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்காக சென்றிருந்த நிலையில் ​​நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. முறைப்பாட்டு அளிக்கும் போது, ​​சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!