திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
" எமது நிறுவனத்தில் எத்தகைய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன என்பதையும் வைரஸ்களும் மாதிரிகளும் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம். இந்த வைரஸ் எம்மிடமிருந்து வருவதற்கு வாய்ப்பே கிடையாது. எம்மிட் கண்டிப்பான ஒழுங்குவிதி முறைகள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்கான ஒழுக்கக்கோவையையும் நாம் பின்பற்றியே செயற்படுகின்றோம். அதனால் நாம் இதை நம்பிக்கையுடன் கூறுகின்றோம் " என்று ஷிமிங் தெரிவித்தார்.
"நோய்நுண்மவியல் நிறுவனமும் பி.4 ஆய்வுகூடமும் வூஹானில் அமைந்திருப்பதால், மக்கள் எங்களுடன் தொடர்புகளை வைத்துக்கொள்வது தவிர்க்கமுடியாதது. எந்தவொரு சான்றும் அறிவும் இல்லாத மக்களை சிலர் வேண்டுமென்றே தவறாக வழிநடத்துகிறார்கள்" என்று அமெரிக்கக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துச் சொன்னார்.
" இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாமே முற்றிலும் ஊகங்களை அடிப்படையாகக்கொண்டவை. மக்களைக் குழப்பத்திற்குள்ளாக்குவதும் தொற்றுநோய்க்கு எதிரான எமது நடவடிக்கைகளிலும் விஞ்ஞான செயற்பாடுகளிலும் தலையீடு செய்வதுமே அவற்றின் நோக்கமாகும். சிலவழிகளில் அவர்கள் தங்களது இலக்குகளைச் சாதித்திருக்கலாம். ஆனால், ஒரு விஞ்ஞானி என்றவகையிலும் விஞ்ஞான, தொழில்நுட்ப முகாமையாளர் என்றவகையில் அது சாத்தியமில்லாதது என்பதை நான் அறிவேன் " என்று அவர் குறிப்பிட்டார்.
கொவிட் -- 19 செயற்கையானது என்பதை நிரூபிப்பதற்கு எந்த சான்றும் கிடையாது எனறு குறிப்பிட்ட ஷிமிங், வைரஸ் மனிதனால் உருவாக்கப்படமுடியாதது என்றார். "
தவிரவும்,பல்வேறு கூறுகளைச் சேர்த்து வைரஸ் ஒன்றை உருவாக்குவதற்கு அதிவிசேடமான விவேகமும் கடும் உழைப்பும் தேவை.எனவே, இன்றைய கட்டத்தில் வைரஸ் இத்தகைய ஒன்றை உருவாக்குவதற்கான ஆற்றல் மனிதர்களிடம் இருப்பதாக ஒருபோதும் நம்பப்படவில்லை " என்றும் அவர் கூறினார்.
வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தனது நிறுவனம் கொவிட் -- 19 இன் மரபணுத்தொடரை உலக சுகாதார நிறுவனத்துடனும் உணவு, விவசாய நிறுவனத்துடனும் பகிர்ந்துகொண்டதாகவும் நோய்நுண்மவியல் நிறுவனம் மற்றும் மிருகவிஞ்ஞான ஆய்வுகூட நிறுவனம் என்ற வகையி்ல் உலகில் மிருக வகைமாதிரிகளை உலகில் முதன்முதலில் உருவாக்கியவர்கள் தாங்களே என்றும் என்னதான் இருந்தாலும் சதிக்கோட்பாடுகள் பரவலானவையாக இல்லை என்றும் ஷிமிங் கூறினார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!