சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
முஸ்லிம்களின் கொண்டாட்டங்களை மூவின மக்களும் முதல் முறையாக ஒன்று கூடி கொண்டாடியிருந்தனர். முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு முதல் தடவையாக காலி முகத்திடலில் மூவின மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரிய போராட்டம் காலி முகத்திடலில் இடம்பெற்றது. யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
இதுவரை, பிரிந்திருந்த நிலையில் தமது கலாசாரங்களை கொண்டாடிய மக்கள், இன்று ஒன்றிணைந்து கொண்டாடி வருகின்றனர்.
இவ்வாறு மூவின மக்களும் ஒன்றிணைந்துள்ளமை, தமிழ் பிரச்சினையை தீர்ப்பதற்கு சரியான களமாக அமையும் என்பதே தற்போதைய தமிழர்களின் கருத்தாக காணப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்கள் எவ்வாறு தமது உரிமைகளை வென்றெடுப்பார்கள் என்பது குறித்து பிபிசி தமிழ், தமிழ் தரப்பினருடன் கலந்துரையாடியது.
தமிழர்களால் மறக்க முடியவில்லை
இதன்படி, தமிழர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் வேதனைகளை ஒரேயடியாக மறந்து விட்டு, காலி முகத்திடல் போராட்டத்தில் தமிழர்களினால் கலந்துகொள்ள முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
''இந்த நாட்டிலே தீர்க்கப்படாமல் இன்னும் இருக்கக்கூடிய தேசிய இனப் பிரச்னையினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் தான். ஏனைய இன பிரிவினரை விடவும், தமிழர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டார்கள். 58ம் வருடம், 77ம் வருடம், 83ம் வருடங்களில் ஏற்பட்ட மோசமான இன கலவரங்களிலும், 2009ல் முடிவுற்ற இறுதி யுத்தத்திலும் கூட பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். எரியூட்டப்பட்டார்கள். சொத்துக்களை இழந்தார்கள். நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.
மனோ கணேஷன்
கலை, கலாசாரம் எல்லாம் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகியது. வடக்கு, கிழக்கில் மாத்திரம் ஏறக்குறைய 75,000 கைம்பெண் சகோதரிகள் இருக்கின்றார்கள். அதேபோன்று, பெரும் அளவிலான குழந்தைகள் ஆதரவற்று நின்றனர். போராளிகள் அல்லாத அப்பாவி மக்கள், பல்குழல் எரிகணைகளினால் கொல்லப்பட்டார்கள்.
இவையெல்லாம் வேதனைகள், காயங்கள். இந்த காயங்களையும், வேதனைகளையும் ஒரேயடியாக மறந்து விட்டு, 'கோட்டா கோ ஹோம்' என்ற கோஷத்துடன் காலி முகத்திடலுக்கு வந்து, தமிழ் மக்களால் கலந்துகொள்ள முடியாது" என மனோ கணேஷன் தெரிவித்தார்.
''கட்சித் தலைவர்கள் என்ற விதத்தில், கோட்டா கோ ஹோம் போராட்ட இயக்கத்திற்குள்ளே ஒரு இடைவெளியை கண்டோம். அவகாசத்தை கண்டோம். ஒரு சந்தர்ப்பத்தை கண்டோம். இடைவெளி, அவகாசம், சந்தர்ப்பம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணினோம். அதற்கான காய்களை நகர்த்தினோம்.
"சாதாரண மக்கள் கலந்துக்கொள்ளாவிட்டாலும் கூட, மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள் இதை பயன்படுத்த வேண்டும் என நான் விரும்பியிருந்தேன்."
"கோட்டா கோ ஹோம் போராட்டத்திலுள்ள பல குழுக்கள் என்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்கள். அந்த குழுக்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, நடத்திய மூன்று கலந்துரையாடல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நானும் கலந்துக்கொண்டேன்.
கலந்துகொண்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் எமது மக்கள் பிரச்னை தொடர்பில் பேசினேன். இந்த நாடு சிங்கள பௌத்த நாடாக மட்டும் இருக்கக்கூடாது.
சிங்களம், பௌத்தம் மட்டும் வரையறுக்கக்கூடாது. பன்மை தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என சிங்கள மொழியிலேயே நான் உரத்து கூறினேன். இந்த நெருக்கடிக்கு எல்லாம் மூலக் காரணம் பொருளாதார பிரச்னை என்று சொன்னாலும் கூட, மூலக் காரணம் தேசிய இனப் பிரச்னை தான் என கடைசியாக இடம்பெற்ற கூட்டத்தில் சொன்னேன் நான்" என மனோ கணேஷன் கூறினார்.
கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''ஆர்ப்பாட்டக்காரர்கள் என்று தொடங்கிய கோட்டா கோ கம சம்பந்தமான ஆர்ப்பாட்டக்காரர்கள், முதலிலே எந்த விதத்தில் தொடங்கினார்களோ தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அவர்கள் செல்லும் போது தமிழ் மக்களின் பிரச்னைகளை அவர்கள் தெரிந்து வைத்துக்கொண்டு செல்வதாக அறிந்துகொள்ள முடிந்தது.
உதாரணத்திற்கு மே 18 அன்று அவர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருந்தார்கள். அவர்கள் படித்தவர்கள். அதன் காரணத்தினாலோ என்னவோ உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காது, தமிழ் மக்களின் பிரச்னைகளை எப்படியாவது தீர்க்க வேண்டும். தீர்த்தால் தான் நாடு முன்னேறும் என்ற அந்த கருத்தை அவர்கள் உள்வாங்கியிருந்தார்கள்.
ஆகவே இப்போது இந்த ஆர்ப்பாட்டம் கிட்டத்தட்ட கடைசி கட்டத்திற்கு வந்திருக்கும் நிலையிலே, தமிழ் மக்களின் பிரச்னைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்பது தொடர்பில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதனை நாங்கள் எங்களுக்கு சாதகமாக பாவிக்க வேண்டும்.
கருத்து பரிமாற்றலுக்கு அழைத்தால், தேசிய தமிழ் கட்சிகள் அதற்கு முகம் கொடுக்க வேண்டும்" என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!