news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கோதுமை மா, சீனி உட்பட 6 உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

19 Oct, 2022
06 உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் இன்று (19) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் கீழே... ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 490 ரூபாவாகும். ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 320 ரூபாவாகும். ஒரு கிலோ நெத்தலியின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,450 ரூபாவாகும். ஒரு கிலோ கடலைப் பருப்புவின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 285 ரூபாவாகும். ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 260 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 169 ரூபாவாகும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!