கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் டிரைவர்கள்! (வீடியோ)
சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறை கோயம்பேடு தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதல் முறையான ஓடும் இந்த மெட்ரோ ரயிலை இயக்கும் பணியில் இரண்டு பெண் பைலட்டுகளும் இடம் பெற்றுள்ளனர்.
பின்னர் அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்து, மெட்ரோ ரயிலை இயக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிரீத்தி கூறுகையில்,'' மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது.
முதலில் எனக்கு புறநகர் ரயில் இயக்கும் வேலையில் சேரதான் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்னரே மெட்ரோ ரயிலில் வேலை கிடைத்து விட்டது" என்கிறார் மகிழ்ச்சியுடன்.
ஜெயஸ்ரீ கூறுகையில், "பரீட்சாத்த முறையில் முதலில் நாங்கள் பணிமைனைக்குள்ளேயே மெட்ரோ ரயிலை இயக்கி பழகினோம். அதில் சிறப்பாக செயல்பட்டதால், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில்களை இயக்க நியமிக்கப்பட்டோம்" என்கிறார்.
உலகில் பைலட்டுகளே இல்லாத மெட்ரோ ரயில்களும் உள்ளன. அது போன்ற மெட்ரோ ரயில்களும் விரைவில் சென்னையில் ஓட வாய்ப்பிருக்கிறது.
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா! (படங்கள்) சென்னை: சென்னை ஆலந்தூர்- கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன.






கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!