ராஜிவை சந்தித்த முதல் தருணம் வீடியோ வெளியிட்டார் சோனியா
24 Oct, 2026
சைலேந்திர பாபு
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையின் இயக்குநர் கோவை வந்துள்ளார் என்றும் தற்போது தடயங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
முதல்கட்ட விசாரணை மூலம் தெரிந்த தகவல்கள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ''சதிச் செயலா என்று விசாரணையின் கடைசியில்தான் சொல்ல முடியும், எல்லா கோணங்களிலும் விசாரணை செய்து வருகிறோம்,'' என்று டிஜிபி தெரிவித்தார்.
கார் வெடிப்பு நிகழ்ந்த உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் சுமார் காவல் துறையினர் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமல்லாது கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சைலேந்திர பாபு நிகழ்விடத்துக்கு வருவதற்கு சற்று முன்னர் அங்கு வந்து பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி செந்தாமரை கண்ணன் ''சிசிடிவி காட்சிகளை வைத்தும் பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காரை ஓட்டிச் சென்றவரின் உடல் முழுமையாக சிதைந்துள்ளதால் அவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.காவல்துறை மற்றும் தடயவியல் துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்" எனக் கூறினார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!