உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
இந்த நிலையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் யார் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷ் முபின் என்பது தெரியவந்தது.
சைலேந்திர பாபு பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, "காரில் ஆணிகள், கோழி குண்டு போன்ற பொருட்களை கைப்பற்றியுள்ளோம்.
அவற்றை தடைய அறிவியல் துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த நபருடைய வீட்டில் சோதனை செய்ததில் ஸ்லோ என்டென்சி எக்ஸ்பிளோசிஸ் பொட்டாசியம் நைட்ரேட் அலுமினிய பவுடர் சல்பர் போன்ற சில பொருட்களை கைப்பற்றியுள்ளோம்.
என்.ஐ.ஏ விசாரணை
12 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளி யார் என்பதையும் இந்த நபர் யார்? சம்பவம் எப்படி நடந்துள்ளது என்பதையும் கண்டுபிடித்து உள்ளோம்.
அவர் ஓட்டி வந்த காரை 9 பேர் விற்று உள்ளார்கள். பத்தாவது நபர்தான் இந்த கார் வாங்கி உள்ளார். சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்துள்ளோம். 2019 ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இறந்த நபரை விசாரணை செய்து உள்ளனர்.
தீவிர விசாரணை
ஜமேஷ் முபின் மீது வழக்குகள் கிடையாது. பொறியியல் பட்டதாரியான இவர் தற்கொலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இவரது செல்போனில் கடைசியாக தொடர்புகொண்ட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொண்டு செல்லவும் வாய்ப்புகள் உள்ளன." என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!