இதில் சந்தேகமடைந்த போலீஸார், கரோலினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்தது தெரியவந்தது.
மேலும் , அடமானம்வைத்த தாலியை எடுத்துத் தர வேண்டும் என்று பிரிட்டோவிடம் கரோலின் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது கரோலின், காய் வெட்டும் கத்தியால் பிரிட்டோவை குத்தியதால் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கரோலினைக் கைதுசெய்து வெரைட்டி ஹால் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கணவனை மனைவியே கொலை செய்துவிட்டு, எதிர்பாராதவிதமாக கத்திபட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!