நாமலுக்கு மஹிந்த ரகசியக் கடிதம்
22 Oct, 2026
துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு
தாமதம் ஏன்?
கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பெண்ணை மீட்க முடியாதது ஏன் என்பது குறித்து காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ''அந்தப் பகுதி மிகவும் பரந்து விரிந்த பகுதி. எந்த விளக்குகளும் இல்லை. கேமராக்களும் இல்லை. அங்கிருந்த சில கேமராக்கள் வேலை செய்யவுமில்லை. 100 போலீசார் லைட்களை வைத்துத் தேடியும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.'' என்றார்.
''சம்பவம் நடந்த பகுதியில் சின்னதாக ஒரு சுவர் இருந்துள்ளது. அதற்குப் பின் கும்மிருட்டாக இருந்ததால் அவரைப் பார்க்க முடியாத நிலை இருந்துள்ளது.'' எனத் தெரிவித்தார்.
'ரகசிய தகவல்'
இவ்வழக்கிற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர், 200–300 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் ஐந்தாறு கேமரா காட்சிப்பதிவுகளில் 3 பேரும் வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்பு, அந்த 3 நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்ததாக காவல் ஆணையர் தெரிவித்தார். அந்தத் தகவலையும், கேமரா காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்கள்தான் என்று உறுதியானதாகவும் அவர் கூறினார்.
மூவர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். இவர்கள் மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் பரிசீலிக்கப்படுமென்றும் கூறினார் அவர்.
கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் ஆணையர் தெரிவித்தார்.
இவர்களுக்கு யாராவது உதவி செய்தனரா என்பது பற்றி விசாரித்து வருவதாக கூறிய காவல் ஆணையர், அவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் மற்றும் மோதிரம் ஆகியவற்றையும், திருட்டு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறினார்.
காவல் உதவி செயலி
தமிழக அரசு, ''2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கிய காவல் உதவி செயலியை மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஆபத்தான நேரங்களில் 100க்கு போன் செய்யத் தேவையில்லை.
அந்த செயலியை திறந்து அதிலுள்ள எஸ்ஓஎஸ் பட்டனை அழுத்தினாலே போதும். அதற்கும் முடியாத பட்சத்தில் 3 முறை அந்த போனை ஷேக் செய்தாலே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று, அடுத்த சில நிமிடங்களில் அங்கே காவல் துறையினர் வந்துவிடுவர்.'' என்று காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!