news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சட்டவிரோதமாக இந்திய மாணவியை வேலைக்கு அமர்த்திய லேபர் கவுன்சிலர்! - பிரித்தானியாவின் ஹினா மீருக்கு £40,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!

10 Dec, 2025

பிரித்தானியாவின் மேற்கு வண்டனில் உள்ள லேபர் கட்சி கவுன்சிலரும், ஹவுன்ஸ்லோவின் முன்னாள் துணை மேயருமான ஹினா மீர் (Hina Mir), விசா காலாவதியான இந்திய மாணவி ஹிமான்ஷி காங்க்லேயை சட்டவிரோதமாகக் குழந்தை காப்பாளராக (Nanny) வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக 40,000 பவுண்டு (சுமார் 41 இலட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

மாணவிக்கு மாதம் 1,200 பவுண்டு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், ஹினா மீர் பொய்யான சாட்சியங்களை வழங்கியதாக நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், மீர் கவுன்சிலர் பதவியில் தொடரக்கூடாது என உள்ளூர் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!