இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?
27 Oct, 2026
ரணில் விக்கிரமசிங்க அதற்கு மிகப் பொருத்தமானவர். அவருக்குப் பின் பதுங்குவதன்மூலம் ராஜபக்சக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தம்மை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம்.
தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு,கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்குள், ராஜபக்ச குடும்பம் பதுங்கும் நிலையிலிருந்து தற்காப்பு நிலைக்கு முன்னேறியிருப்பது அதைத்தான் காட்டுகின்றது.
எனவே தம்மை முழுமையாக பலப்படுத்திக் கொள்ளும்வரை அவர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பார்களா என்பது சந்தேகமே.
அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலைக் குறித்து இடைக்கிடை வீறாப்பாகக் கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும், ராஜபக்சக்கள் வெளிப்படையாக வாய் திறப்பதில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
அக்குடும்பத்தின் அடுத்த வாரிசாகக் கருதப்படும் நாமல் ராஜபக்ஸ தன்னை பலப்படுத்திக் கொள்ளும் வரையிலும் அவர்கள் பொறுத்திருப்பார்கள்.
எனவே அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய பதிலியாக முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.ராஜபக்சக்கள் ரணிலுக்கு இடைஞ்சலாக மேலெழுவதைத் தடுக்க சனல் நாலு வீடியோ உதவக் கூடும்.
இதில் ஒரு வினோதமான அரசியல் சமன்பாடு உண்டு. அதன்படி ராஜபக்சங்களுக்கு எதிரானது ரணிலுக்குச் சாதகமானது. ஆனால் அடுத்த ஆண்டு ராஜபக்சகளின் பதிலியாகத்தான் ரணில் களமிறங்கக்கூடும். ஆயின்,அதில் அவருக்குக் கிடைக்கக்கூடிய வெற்றி யாருடைய வெற்றியாக இருக்கும்? அது அவருடைய சொந்த வெற்றியா அல்லது ராஜபக்சக்களின் வெற்றியா?
எதுவாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்கள் களமிறங்குவதை குறிப்பிடத்தக்க அளவுக்கு அந்த வீடியோ தடுக்கக்கூடும்.அதே சமயம் அந்த வீடியோ தமிழ் அரசியலில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?
உடனடிக்கு அது கிழக்கில் பிள்ளையானுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.எனினும், அங்கேயும்கூட பிள்ளையானுக்கு ஒரு சாதகமான இடம் உண்டு.
ஒரு முஸ்லிம் அவரைக் காட்டி கொடுத்து விட்டார் என்பதைத் தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பாதிக்கும் விதத்தில் உருப்பெருக்கினால், அது கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் உணர்வுகளுக்குத் தலைமை தாங்கத் தேவையான பிள்ளையானின் தகைமையை மேலும் அதிகப்படுத்தக்கூடும்.சீயோன் தேவாலயத்தில் கொத்தாகக் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
இது உள்நாட்டளவில்.அதேசமயம் அனைத்துலக அளவில் நீதிக்காகப் போராடும் தமிழ் அமைப்புகளுக்கு அந்த வீடியோ சாதகமானது.
தமிழ் மக்களால் ஏற்கனவே குற்றஞ் சாட்டப்படும் ஒரு குடும்பத்தை அந்த வீடியோ மேலும் அனைத்துலக அளவில் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இலங்கைத்தீவின் அரசுக் கட்டமைப்பை அது அபகீர்த்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கக் கண்டம் ராஜபக்சங்களுக்கு ஆபத்தான ஒரு கண்டமாக மாறி விட்டது.
அக்கண்டத்தில் உள்ள இரண்டு பெரிய நாடுகளான அமெரிக்காவும் கனடாவும் ராஜபக்சக்களுக்கு எதிராக நிர்ணயகரமான சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கின்றன.
குறிப்பாக கனடா இரண்டு மூத்த ராஜபக்சங்களுக்கு எதிராகத் தடை விதித்திருக்கிறது.
அவ்வாறு தடை விதிக்கப்பட்ட அதே காலப்பகுதியில்,கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் அச்சட்டத்தின் பிரகாரம் இரண்டு மூத்த ராஜபக்சகளுக்கும் அமெரிக்காவில் நெருக்கடியுண்டு.
தவிர,அமெரிக்காவும் கனடாவும் சில ராணுவ அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்திருக்கின்றன.
குறிப்பாக,இலங்கைத் தீவின் ராணுவத் தளபதி மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு எதிராகத் தடைகள் உண்டு.இவற்றுடன் கனடா இனப்படுகொலை தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.
இவற்றுடன் கடந்த ஆண்டு ஐநா தீர்மானம் ஒன்றின் பிரகாரம் போர்க் குற்றங்கள் தொடர்பான சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஒன்று இயங்கி வருகின்றது.
அதில் சேகரிக்கப்படும் சான்றுகளும் சாட்சியங்களும் என்றைக்கோ ஒருநாள் இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடியவை.
மேற்கண்ட நகர்வுகள் யாவும் மேற்கத்தியப் பரப்பில் நிகழ்ந்தவை. இவற்றுடன் அண்மையில் இந்தியாவில்,ராமேஸ்வரத்தில் வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இலங்கைத்தீவில் இடம்பெற்றது ஒரு பெரிய மனிதப் படுகொலை அல்லது இனப்படுகொலை என்ற பொருள்பட அவர் பேசியிருந்தார்.
இந்த வரிசையில் கடந்த வாரம் சனல் நாலு வீடியோவும் வெளி வந்திருக்கிறது. மேற்கண்ட அனைத்து விடயங்களும் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்களுக்குப் பலம் சேர்ப்பவை.
இலங்கைத்தீவின் அரசியல் கலாச்சாரம் பொறுப்பு கூறும் பண்புடையது அல்ல என்பதை தமிழ் மக்கள் உலக சமூகத்தின் முன் நிரூபிப்பதற்கு அவை உதவும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!