news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சன்னியாசியாகிறார் நயன்... (படங்கள்)

15 Jan, 2015

காதல் தோல்வி அடைந்தவர்கள் நிம்மதியைத் தேடி ஆன்மிகத்துக்கும் இன்னும் சிலர் தேவதாஸ் பாணியில் பாட்டிலுக்கும் தாவி விடுகின்றனர்.

சிம்பு, பிரபுதேவா என இருவரிடம் காதல் தோல்வியில் துவண்டுபோனவர் நயன்தாரா. அவர் தேர்வு செய்திருக்கும் பாதை சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இனி காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம், சன்னியாசி ஆகிவிடலாம் என அவர் எண்ணி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக அவர் சன்னியாசிகளுடன் அமர்ந்து அமைதி தேடுகிறாராம்.

கடந்த ஆண்டு இமயமலை சென்ற அவர் அங்கிருந்த சாமியார்களுடன் மனம்விட்டு பேசி ஆறுதல் தேடினார். தனுஸ்ரீ தத்தா, ராகசுதா போன்றவர்கள் சன்னியாசம் வாங்கினர்.

இவர்களில் ராகசுதா மனதை மாற்றிக்கொண்டு நடிகர் ரஞ்சித்தை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு இல்லறத்துக்கு திரும்பினார்.

மன சஞ்சலத்தில் இருக்கும் நயன், சில நடிகைகள் எடுத்ததுபோல் சன்னியாசியாகும் முடிவை எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக பேச்சு உள்ளது. தற்போது பட எண்ணிகையை அவர் வெகுவாக குறைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆர்யா பட விழாவுக்கு சிம்புவுடன் -நயன்தாரா ஜோடியாக வந்ததால் பரபரப்பு (வீடியோ)  

ரிஷிகேஷ் போன நயன்தாரா… ருத்ராட்ச மாலை அணிந்து வழிபாடு (படங்கள்)

nayan thanra

சென்னை: பக்தி முத்தியதால் இமயமலைக்கு சென்றார் நயன்தாரா.சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் முறிவு ஏற்பட்டதையடுத்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.

மீண்டும் நடிக்க வந்தபிறகு மொழி மற்றும் ஹீரோ பேதம் பார்க்காமல் நடித்து வருகிறார். சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு‘ படத்தில் மீண்டும் சிம்பு ஜோடியாக நடித்தார். இதையடுத்து உதயநிதியுடன் ‘நண்பேன்டா‘ படத்திலும் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக புதிய படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் ராஜா பட ஷூட்டிங்கிற்காக டேராடூன் சென்றார். அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளுக்கு சென்ற நயன்தாரா, கோயில்களுக்கு நடந்து சென்று பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டார். லக்ஷ்மண் ஜுலா, சப்தா ரிஷி ஆஷ்ரம், நீல்காந்த் மாதேவ் மற்றும் சபத் சரவோர் போன்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டார். ஏற்கனவே ரஜினி இமயமலைக்கு சென்று தியானம் செய்வது வழக்கம். சமீபத்தில் மன அமைதி தேடி இமயமலை சென்றார் சிம்பு. அவரைத் தொடர்ந்து நயன்தாராவும் இமயமலை சென்றிருக்கிறார். - Nayantara-New-Photo-Stills-6-660x440Nayantara-New-Photo-Stills-8-660x440Nayantara-New-Photo-Stills-10-660x990Nayantara-New-Photo-Stills-11-660x990Nayantara-New-Photo-Stills-14-660x990Nayantara-New-Photo-Stills-18-660x990Nayantara-New-Photo-Stills-24-660x990Nayantara-New-Photo-Stills-29-660x990Nayantara-New-Photo-Stills-33-660x990

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!