news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சபுகஸ்கந்த பகுதியில் வீசும் துர்நாற்றம்!

02 Oct, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சூழவுள்ள பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் அறிக்கை கோருமாறு பியகம பிரதேச சபையின் தலைவர் ஆனந்த கணேபொல தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த சில நாட்களாக கடும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பில் தெரண பியகம பிரதேச சபையின் தலைவர் ஆனந்த கணேபொலவிடம் இன்று வினவியபோது, ​​இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அது தொடர்பான அறிக்கையை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!