news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் மாணவனின் செயற்பாடு

07 Nov, 2020
கொரோனா இடர் மத்தியில் உயர்தர பரீட்சையை சிறப்பாக எழுத்தி முடித்து, தான் கற்ற பாடசாலையை வணங்கி கௌரவித்து விடைபெற்ற மாணவனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நேற்று க.பொ.த.(உ/த) பரீட்சையை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர். தான் 13 வருடம் கல்விகற்ற பாடசாலையான எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி வித்தியாலத்திலிருந்து விடைபெறும் போது அப்பாடசாலையை நோக்கி விழுந்து வணங்கி விடைப்பெற்று நல்லதொருபண்பினை எடுத்துக்காட்டிய இம் மாணவன் நிச்சயமாக உன்னதமான எதிர்காலத்தை தனதாக்குவானாக என எல்லோரும் பாராட்டி வருகின்றனர். பெற்ற தாய் தந்தையைக் கூட வணங்காத சமுதாயத்தினிடையே தனக்கு பாடம் புகட்டிய பாடசாலையை விழுந்து வணங்குபவன் மகான் என பாராட்டுதல்களை பதிவு செய்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!