சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
தீவு, வேலை
இந்த வேலைக்கு வரும் நபர் கடினமான வானிலையை எதிர்கொள்ள வேண்டும். மேலும் ஒரு வருடத்திற்கு வீடு திரும்பும் வரை அவர்களால் ஃப்ரெஷான உணவு எதுவும் சாப்பிட முடியாது, என ரெபேக்காவும் லூசியும் எச்சரிக்கிறார்கள்.
"பிரிட்டனைச் சேர்ந்த எங்களுக்கு மழை ஒன்றும் பெரிதல்ல, நாங்கள் பார்க்காத மழையா என்று நினைத்து இங்கு வந்தேன்.
ஆனால் மிக கனமழை பெய்யும். 'ரோரிங் ஃபோர்டிஸ்' என்று அழைக்கப்படும் மோசமான குளிர் முனையில் இருக்கிறோம். அதனால் இங்கு கடுமையான குளிர் காற்று வீசும்,"என்கிறார் லூசி.
"இந்த தீவில் இருந்து அருகில் உள்ள நாட்டுக்கு செல்ல நீங்கள் சில ஆயிரம் கிலோமீட்டர் கடலில் பயணம் செய்ய வேண்டும். அப்படி என்றால் எப்படி உங்களுக்கு ஃப்ரெஷான உணவு கிடைக்கும். கேனில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். அதை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்," என்கிறார் ரெபேக்கா.
"நான் இங்கு வருவதற்கு முன்பே இங்கு கிடைக்கும் உணவு பற்றி எனக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது," என்று லூசி கூறினார்.
"ஃபிரெஷான கேரட்டையும் ஆப்பிளையும் கடித்து சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது," என லூசி தெரிவித்தார்.
பழங்கள், காய்கறிகளை ஃபிரெஷாக சாப்பிடுவதால், அந்த விதைகள் இந்த தீவு முழுவதும் பரவி அவை இங்கு முளைக்கும் அபாயத்தை தவிர்க்கவே கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர்.
இதனால் இந்த தீவில் பல்லுயிர் பெருக்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இதனால் ஒரு வருடத்திற்கு தேவையான காய்கறிகளையும், இறைச்சியையும் சேமித்து வைக்க இரண்டு பெரிய ஃபீரிஸர் இங்கு பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும், புதிய நபரை அழைத்து வரும் போது அந்த வருடத்திற்கான உணவு இங்கு நிரப்பப்படுகிறது. அந்த உணவை வைத்து இந்த 7 பேரும் ஒரு வருடம் உயிர் வாழ வேண்டும்.
செப்டம்பர் மாதத்தில் பழைய ஊழியர்கள் விடுப்பில் செல்வார்கள். அப்போது அவருக்கு பதிலாக புதிய நபர் காஃப் தீவில் வேலைக்கு சேர்ந்து கொள்வார்.
இப்போது தேர்வு செய்யப்படும் நபர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஃப் தீவுக்கு சென்று தனது பணியை தொடங்க வேண்டும்.
தனிமை வாழ்க்கை
"நான் ஸ்காட்லாந்தில் பணிபுரிந்த போது செலவிட்ட நேரத்தை விட இங்கு எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவது போல் உணர்கிறேன்," என்கிறார் ரெபேக்கா.
இங்கு பணியாற்றும் அனைவருக்கும் இணையதள வசதி வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரங்களில் இங்குள்ள பணியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்பார்கள் என்று ரெபேக்கா கூறுகிறார்.
"இங்குள்ளவர்கள் நல்ல மனிதர்கள். நாங்கள் அனைவரும் எங்கள் கதைகளை பகிர்ந்து கொள்வோம். தெரியாத விஷயத்தை பிறரிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம். கடினான காலங்களில் ஒருவரையொருவர் ஆதரிக்கிறார்கள்.''
லூசியும் ரெபேக்காவும் பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டிகாக அழிந்து வரும் பறவை இனங்களான அட்லாண்டிக் மஞ்சள்-மூக்கு அல்பாட்ராஸ்(Atlantic yellow-nosed albatross), அட்லாண்டிக் பெட்ரல் (Atlantic petrel), மேக்கில்லிவ்ரேயின் ப்ரியான்(MacGillivray Prion) போன்ற பறவைகளை கண்காணித்து வருகின்றனர்.
பகல் நேரங்களில் நீர் புகாத மழை கோட், முழங்கால் அளவு பூட்ஸை அணிந்து கொண்டு தீவு முழுவதும் இந்த பறவைகளின் தடங்களை தேடி பதிவு செய்ய வேண்டும்.
இந்த பறவைகள் பொரிக்கும் குஞ்சுகளை அடையாளம் கண்டு கணக்கெடுப்பதும் இவர்களின் தினசரி பணிகளின் ஒரு அங்கமாகும்.
"இங்கே வாழும் எலிகளுக்கு சாப்பிட வேறு விலங்குகள் இல்லாத நிலையில், அவை கடல் பறவைகளை பிடித்து உண்ணத் தொடங்கியுள்ளன. அதனால் அந்த குஞ்சுகளுக்கு ஆபத்தாக இந்த எலிகள் மாறுகின்றன,'' என்கிறார் லூசி.
எலிகளால் ஏற்பட்ட பிரச்னையால், 2017-18ஆம் ஆண்டில் டிரிஸ்டன் அல்பாட்ராஸ் குஞ்சுகளில் 21% மட்டுமே பிழைத்தன. அழிந்து வரும் மேக்கில்லிவ்ரேயின் ப்ரியான் இனத்தின் குஞ்சுகள் பிழைக்கவே இல்லை.
19 ஆம் நூற்றாண்டில் மாலுமிகளால் காஃப் தீவில் எலிகள் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டி கருதுகிறது. அதனால் எலிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
தற்போது எலித்தொல்லை குறைந்து இருந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.
பறவை, எலி, பதப்படுத்தப்பட்ட உணவு, இயற்கை, கடலுடன் காஃப் தீவில் ஒரு வருடம் வேலை செய்ய விண்ணப்பிக்க கடைசி தேதி மே 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!