ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
ஆனால், சம்யுக்தா மற்றும் அவரது தோழிகள் தம்மைத் தரக்குறைவாகப் பேசியதால்தான் தாம் கோபமடைந்ததாக கவிதா ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழில் 'வாட்ச்மேன்', 'கோமாளி', 'பப்பி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை சம்யுக்தா.
சமீபத்தில் இவரும் இவர் நண்பர்களும் பூங்காவில் உடற்பயிற்சி செய்யச் சென்றுள்ளனர். இவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்துள்ள கவிதா ரெட்டி, இவர்களை நோக்கித் திட்டியபடியே, நீங்கள் கவர்ச்சி நடனமாடுபவர்களா என்று கேட்டுத் தாக்க முயன்றதாக இவர் குற்றஞ்சாட்டுகிறார்.
"எங்கள் மூன்று பேர் அருகில் வந்த கவிதா ரெட்டி, நாங்கள் தவறான உடை அணிந்துள்ளோம் என்றும், உடற்பயிற்சி செய்வதற்குப் பதிலாக கேப்ரே நடனம் ஆடுவதாகவும் சொன்னார். மேலும் தற்போது கன்னடத் திரையுலகில் சர்ச்சையாகியுள்ள போதை மருந்து விவகாரத்தில் எங்கள் பெயரைச் சேர்ப்பதாகவும் மிரட்டினார்," எனவும் குற்றஞ்சாட்டுகிறார் சம்யுக்தா. ஸ்போர்ட்ஸ் ப்ரா என்பது தவறான உடையா என்றும் சம்யுக்தா அந்தக் காணொளியில் கேட்கிறார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கவிதா ரெட்டி அளித்துள்ள விளக்கத்தில் என்னை சம்யுக்தாவும் அவரது தோழிகளும் தரக்குறைவாக பேசினர். அதனால் கோபமடைந்தேன் என்கிறார். கவிதா ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அவர் நாங்கள் அந்த ஏரியை 10 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம், அங்கு தினமும் அதிக சத்தம் வைத்து பாடல் கேட்டு சம்யுக்தா மக்களூக்கு இடையூறு செய்கிறார் என அவர் குற்றஞ்சாட்டுகிறார்.The future of our country reflects on what we do today. We were abused and ridiculed by Kavitha Reddy at Agara Lake@BlrCityPolice @CPBlr There are witnesses and more video evidence I request you to look into this#thisisWRONG Our side of the storyhttps://t.co/xZik1HDYSs pic.twitter.com/MZ8F6CKqjw
— Samyuktha Hegde (@SamyukthaHegde) September 4, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!