தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
சீனா மீதான புவிசார் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் அது. இந்த ஒப்பந்தத்திற்கு சீனாவின் ஆதரவைப் பெற்றதாக அரசாங்கம் இப்போது கூறினாலும், அவர்கள் சீனாவுடன் என்ன ஒப்பந்தம் செய்தார்கள் என யாருக்கும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வெளிப்படைத்தன்மை இல்லாமை இலங்கை அரசியலில் ஒன்றும் புதிதல்ல. தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பெற்றுக்கொண்ட இன்னுமொரு முக்கிய அரசியல் பண்பு இதுவாகும். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த ஒப்பந்தங்கள் தற்காலிகமானவை மட்டுமே என்பது தெளிவாகிறது. அவர்களது ‘கற்பனை வளர்ச்சி’ எங்கிருந்து வரப் போகிறது என்பதைக் குறிப்பிடாமல் எதிர்காலத்தில் “வளர்ச்சி” உருவாகும் என்றபார்வையுடன் திருப்பிச் செலுத்தும் காலத்தைநீடிப்பது ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதிய கடனின் மூலம் பழைய கடன்கள் ஒத்திவைக்கப்படுகிறதே தவிர இலங்கை பொருளாதாரத்தில் எந்தவொரு உறுதியான மேம்பாடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படவில்லை. மேலும், கடந்த ஆண்டு நாட்டின் திவால் நிலைக்கு வழிவகுத்த பொருளாதார பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. கடன்வழங்கத் தயாராக இருக்கும் எந்த நாட்டிலிருந்தும் கடனை வாங்குதல் மற்றும் உதவி தொகை பெறுதல் மூலம் மட்டுமே இலங்கைப் பொருளாதாரம் தொடர்ந்து உயிர்வாழ்கிறது.
இதுதவிர, வளரும் உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கூர்மையாகி வரும் புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவை மேலும் சிக்கல்களைஅதிகமாக்கின்றன. வங்குரோத்து அடைந்த நாடு தற்பொழுது மீண்டும் எழுந்து விட்டதாக ரணில் உட்பட ஒரு சாரார் பேசி வருகின்றனர். நிலைமைகள் எல்லாம் அப்பிடியே இருக்க அல்லது மிக மோசமாக சென்றுகொண்டிருக்க எதன் அடிப்படையில் இவ்வாறு ஒருபொய்யை கட்டமைக்கிறார்கள்.
இந்தக் கொள்கைகளின் விளைவாக, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், நாடு இதற்குமுன் சந்தித்திராத நெருக்கடியான வாழ்க்கைத்தரத்தை எதிர்கொள்கின்றனர். பட்டினி ஒருபுறமும் விலைவாசி உயர்வு மறுபுறமும் நெருக்குவதால், எந்தக்குழந்தைகள் கல்வி பெறுவது ,எந்தக் குழந்தைவேலைக்கு செல்வது என்பதைத் தேர்ந்தெடுக்கும்நிலைக்கு பல குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளது. “ரைஸ் குக்கரில் அரிசி வேகும் நேரம் – மனம் நொந்து நூடில்ஸ் ஆகிறது!” என்று அப்துல் ரஹீம் எழுதிய கவிதை நிலைமையைபடம்பிடித்துக் காட்டுகிறது
இந்த ஆண்டு பெப்ரவரி மாத நடுப்பகுதியில்மின்கட்டணம் மேலும் 65% ஆல் அதிகரித்ததால், பணம் செலுத்த முடியாமல் மின்சாரத்தை முழுவதுமாகஅணைப்பதைத் தவிர பலருக்கு வேறு வழியில்லை. மேலும், எரிபொருள் மற்றும் இதர முக்கியபொருட்களின் விலை உயர்வுடன் மின் கட்டணஉயர்வும் மக்களை மென்மேலும்நெருக்கடிக்கு உள்ளாக்கின்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நுகர்வோர் விலை பணவீக்கம் சுமார் 50% ஆக அதிகரித்தமையின் வெளிப்பாடுகளே இவையாகும்.
எதிர்காலத்தில் சுபீட்சமான இலங்கையை உருவாக்க வேண்டும் என்றால் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் தற்பொழுது சில கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து பிரசங்கிக்கிறது. “இந்த நாட்டு மக்கள் படும் இன்னல்களை நான் அறிவேன். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்காக நாங்கள் மன்னிப்புக்கோருகின்றோம்” என்று ரணில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூறினார். இந்த போலி மன்னிப்புபட்டினியால் வாடுபவர்களுக்கு என்ன ஆறுதலைவழங்கப் போகிறது.
இன்னும் முதலாளிகள் ஈட்டும்அபரிமிதமான லாபத்தைக் குறைக்க அரசாங்கம் எந்தமுயற்சியும் எடுக்கவில்லை. தொழிலாளர்கள் தங்கள்பெல்ட்டை இறுக்கிக் கொள்ளுமாறு கேட்கும் அதேவேளையில், அரசாங்கம் லாபத்தைப் பெருக்கவும், முதலாளிகளின் வயிற்றைக் கொழுக்கவும் அனைத்துமுயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நாட்டைசூறையாடி வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் சுகபோக வாழ்க்கையில் திளைக்க வெட்டுக்கள் என்றபெயரில் மக்கள் மீதுதான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன.
பெருமளவில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைசெலுத்த தொழிலாளர்கள் மறுக்க வேண்டும். ஏழை விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் தங்களிடம் உள்ள பெரும் கடனை செலுத்த மறுக்க வேண்டும். அத்தகைய பணம் செலுத்தாததை ஒழுங்கமைக்க பிரச்சாரங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அரசாங்கம் கடனை செலுத்த மறுத்து, அந்தபணத்தை உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் அத்தியாவசியத் தொழில்களில் முதலீடு செய்யவும், போதுமான, ஜனநாயகக் கட்டுப்பாட்டில் உள்ளவிநியோக பொறிமுறையை நிறுவவும் நாம் கோரவேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் விதித்துள்ள நிபந்தனைகளை நாம் அவ்வாறே ஏற்றுக்கொள்ளக்கூடாது. பொருளாதாரா மீட்சி பெற நமக்கு முன்னாள் உள்ளதெரிவுகள் இவையாகும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!