உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
மகனையும், தாயையும் ஆணவக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தண்டபாணி
அனுசுயா காயங்களுடன் தப்பியது எப்படி?
பாட்டி கண்ணம்மாவின் வீட்டிற்குச் சென்ற மகன் சுபாஷையும் மருமகள் அனுசுயாவையும் தண்டபாணி சரமாரியாக தாக்கியுள்ளார்.
அப்போது, வெட்டுக்காயங்களுடன் ஒருவழியாக வீட்டை விட்டு வெளியே தப்பி வந்த அனுசுயாவை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர். மக்கள் கூடுவதைக் கண்டதும் தண்டபாணி தப்பி ஓடிவிட்டார் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
அனுசுயாவை மீட்ட பொதுமக்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கே தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, மருத்துவமனைக்குச் சென்று அனுசுயாவிடம் வாக்குமூலம் பெற்றார்.
தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அனுசுயா, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டபாணியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு, கொலை வழக்கு, உள்ளிட்ட (307, 302) மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை அதிகாரி ஆய்வாளர் பார்த்தீபன் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!