இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 10 மொழிகள் இவைதான்
05 Nov, 2026
“அந்தக் கிணற்றின் உரிமையாளர் பெயரைச் சொல்லி, இக் கிராமத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் என்பதால்தானே எங்களை அவமானப்படுத்தினார்.
இனி யாரிடமும் தண்ணீருக்காக பிச்சையெடுக்கப்போவதில்லை என உறுதியெடுத்தேன்.
பக்கத்திலுள்ள மாலேகான் நகருக்குச் சென்று, கிணறு வெட்டுவதற்கான கடப்பாறை, மண்வெட்டி வாங்கி வந்து, கடவுளை பிரார்த்தனை செய்தபின் வேலையை தொடங்கி விட்டேன். என் முயற்சிக்கு பலன் கிடைத்ததற் காக நன்றி கூறுகிறேன்” என்றார் பாபுராவ்.
தினக்கூலியான பாபுராவ், தினமும் வேலைக்குச் செல்வதற்கு முன் நான்கு மணி நேரம் வந்த பின் இரண்டு மணி நேரம் கிணறு தோண்டியுள்ளார்.
40ஆ-வது நாளில் கிணற்றில் தண்ணீரைப் பார்க்கும் வரை தினமும் 14 மணி நேரம் இடைவிடாது உழைத்துள்ளார்.
“அந்த 40 நாட்களில் என் உணர்ச்சிகள் எப்படிப்பட்டவை எனக் கூறவே முடியாது. எங்கள் பகுதி தலித் மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும்.
வேறு இன மக்களிடமிருந்து தண்ணீரை யாசிக்கக்கூடாது எனக் கருதினேன்” எனக் கூறும் பாபுராவ் தாஜ்னி, பி.ஏ. இறுதியாண்டு வரை படித்திருக்கிறார்.
இது குறித்து அவரது மனைவி சங்கீதா தெரிவித்துள்ளதாவது, “கிணற்றில் தண்ணீர் ஊறும்வரை அவருக்கு நான் உதவவேயில்லை. இப்போது ஒட்டுமொத்தக் குடும்பமும் கிணற்றை ஆழப்படுத்த உதவுகிறோம்” என கூறியுள்ளார்.
இப்போது, 15 அடி ஆழம், 6 அடி அகலமுள்ள கிணற்றை, மேலும் 5 அடி ஆழம் தோண்டவும், 8 அடியாக அகலப்படுத்தவும் விரும்புகிறார் பாபுராவ் தாஜ்னி.
அப்பகுதியைச் சேர்ந்த ஜெய்ஸ்ரீ கூறும்போது, “பாபுராவுக்கு நன்றி.
கிராமத்தின் அடுத்தகோடிக்கு சுமார் ஒரு கிலோமீற்றர் சென்றுதான் நீர் எடுத்து வர வேண்டும்.
யாரிடமும் அவமானப்படாமல் இப்போது எங்களுக்கு எந்த நேரமும் தண்ணீர் கிடைக்கிறது” என கூறியுள்ளார்.
பாபுராவுக்கு இப்போது மெதுவாக அங்கீகாரம் கிடைத்து வருகிறது. கிராமத் தலைவர் பாபுராவின் வீட்டுக்கு சென்று பாராட்டிச் சென்றிருக்கிறார். மாலேகான் கிராம சேவகர், பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் நானாபடேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். விரைவில் சந்திப்பதாகவும் உறுதி யளித்திருக்கிறார். ஒரு சமூக சேவகர் ஒருவர் 5000 ரூபா பணப்பரிசை கொடுத்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!