இதுதொடர்பாகப் பேசிய அந்த இளைஞர்கள், `சாப்பாட்டுக்கு அரிசி இல்லாத காரணத்தால் காடுகளில் உணவுக்காகத் தேடி அலைந்ததாகவும், அதன்பிறகு இந்தப் பாம்பை உணவுக்காக வேட்டையாடியதாகவும்' கூறியுள்ளனர்.
இந்த இளைஞர்களின் கருத்துக்கு அருணாசலப் பிரதேச அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் அரிசி பற்றாக்குறை இல்லை. அதேபோன்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று மாதத்துக்குத் தேவையான அரிசி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இளைஞர்கள் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது. இதையடுத்து, அந்த மூன்று பேர் மீதும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இளைஞர்கள் வேட்டையாடியிருப்பது ராஜ கருநாகம், இது மிகவும் அரிதான வன உயிரினம் என்பதால், ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவு இந்த இளைஞர்கள்மீது பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!