news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயம்!

16 Apr, 2024
பொல்கஹவெல - ஹொதெல்ல பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கிணற்றில் வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (16) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாய் , தந்தை , பாட்டி மற்றும் 4 பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!