கொள்ளைச் சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் கொடுத்த மயக்க மருந்தினால் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழப்பு - மட்டக்களப்பில் சம்பவம்
30 Oct, 2026
அதேபோல், தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர் வ. சிறிபிரகாஸும் 7 வாக்குகளைப் பெற்றார். இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், திருவுளச் சீட்டு முறைமையின் மூலம் தவிசாளராக வ. சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளர் தேர்வில், தமிழரசு சார்பில் அ. பாலமயூரன் மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் ஞா. கிஷோர் போட்டியிட்டனர்.
இவர்களும் சம வாக்குகளைப் பெற்ற நிலையில், திருவுளச் சீட்டு மூலம் ஞா. கிஷோர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலை பேணியது.
இந்நிலையில், தமிழ் தேசிய பேரவை சார்பில் சாவகச்சேரி நகர சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினருக்கு இன்று (13) நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது, அதற்கிடையில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வு நிகழ்வின்போது, தமிழரசு கட்சி சார்பில் பிரதிச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சாயந்தனும், தமிழ் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!