இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
சிறுவன் ஒரு ஆற்றங்கரையில் குச்சிகளைப் பயன்படுத்தி தண்ணீரைத் தோண்டி, ட்ஸ்வான்ஸ்வா என்ற காட்டுப் பழத்தை உண்டு வாழ்ந்துள்ளான். சிறுவனின் கதையை விவரித்த உள்ளூர் எம்.பி. முட்சா முரோம்பெட்ஸி, சிறுவன் அலைந்து திரிந்து , திசை தவறி, ஆபத்தான மட்டுசடோன்ஹா பூங்காவிற்குத் தெரியாமல் சென்றுள்ளான். ஹாக்வேக்கு அருகிலுள்ள காட்டில் 5 நீண்ட, கொடூரமான நாட்களுக்குப் பிறகு. உமே நதியின் துணை நதி அருகே சிறுவனை ரேஞ்சர்கள் உயிருடன் கண்டுபிடித்தனர். வீட்டிலிருந்து 23 கிமீ தூரம் அலைந்து திரிந்து, கர்ஜனை செய்யும் சிங்கங்கள், யானைகளைக் கடந்து செல்வது, காட்டுப் பழங்களை உண்பது மற்றும் ஆபத்தான காட்டுப் பகுதிகளுக்கு மத்தியில் உறங்குவது, 8 வயது சிறுவனுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று விவரித்தார். மட்டுசடோனா பூங்காவில் சுமார் 40 சிங்கங்கள் உள்ளன. துணிச்சலான பூங்கா ரேஞ்சர்களுக்கும், நியாமினியாமி சமூகத்தை சேர்ந்தவர்களும், ஒவ்வொரு நாளும் சிறுவன் கேட்கும்படி டிரம்ஸ் அடித்து தேடி கடைசியில் கண்டுபிடிக்க உதவியுள்ளார்கள் என்று நன்றி தெரிவித்த எம்.பி., டினோடெண்டாவைக் கவனித்து, அவரைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்கு ரேஞ்சர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.💫 A boy missing & found in Matusadonha game park A true miracle in remote Kasvisva community, Nyaminyami in rural Kariba, a community where one wrong turn could easily lead into a game park. 8-year-old Tinotenda Pudu wandered away, lost direction & unknowingly headed into the… pic.twitter.com/z19BLffTZW
— Mutsa Murombedzi MP🇿🇼 (@mutsamu) January 1, 2025
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!