எனது சகோதரர் குறித்த வழக்கு நியாயமான விதத்தில் இடம்பெற்றதாக நாங்கள் கருதவில்லை.
எங்கள் ஜனாதிபதி மீது எனக்கு நம்பிக்கையுள்ளது அவர் மனுவை வாசிப்பார் என கருதுகின்றேன் என சகோதரி லீலாவதி சுப்பையா தெரிவித்துள்ளார்.
இளவயதிலிருந்து எனது சகோதரர்இரக்ககுணமிக்கவர் அனைவராலும் விரும்பப்பட்டவர் அவர் எவருக்கும் எந்த தீமையும் செய்யவில்லை அவர் தனது குடும்பத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தார் என சகோதரி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஆறுமாதகாலப்பகுதியில் சிங்கப்பூர் முதல்தடவையாக மரணதண்டனையை நிறைவேற்றவுள்ளது.
2017 இல் கஞ்சா வைத்திருந்தார் என அதிகாரிகள் சுப்பையாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர்.
தாய்லாந்து உட்பட பல நாடுகளில் கஞ்சா வைத்திருப்பது குற்றமற்ற செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மரண்தண்டனையை கைவிடவேண்டும் என மனித உரிமை அமைப்புகள்வேண்டுகோள் விடுத்துவருகின்றன.
இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதத்தில் பல தவறுகளும் பிழைகளும் உள்ளதாக குடும்ப உறுப்பினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!