ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
ஒரு கட்டத்தில் நாடக்ததில் நடிக்க வேண்டாம் என்று தடை போடும் நிலைக்கு சென்றுள்ளான். இதையடுத்து மாமனார் ரவிச்சந்திரனிடம் தொலைபேசியில் பேசிய சித்ரா, இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஹேம்நாத் தரும் நெருக்கடிகள் குறித்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
இந்த குரல் பதிவு சித்ராவின் தொலைபேசியில் பதிவாகியிருந்த நிலையில் ஹேம்நாத் அதனை அழித்தது சைபர் குற்ற பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ரெகவரி சொப்ட்வேர் மூலம், அவர் பேசிய குரல் பதிவுகளை மீட்ட பொலிஸார் அக் குரல் பதிவில் சித்ரா தனது மாமனாரிடம் தெரிவித்த புகார்களை ஆதாரமாக கொண்டு ஹேம்நாத்தை கைது செய்ததாக தெரிவித்தனர்.
மாமனார் தொலைபேசியிலுள்ள அழைப்பு விவரங்கள் மூலம் சித்ரா அவருடன் பேசி இருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இதற்கிடையே யாரையோ காப்பாற்ற தன் மகனை பொலிஸார் கைது செய்திருப்பதாக ஹேம்நத்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறி இருப்பது விவகாரத்தை திசை திருப்பும் செயல் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் 5 க்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்டவர் என்பதும் பல மதுபான விடுதிகளில் விடிய விடிய போதையில் பொழுது போக்கியதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் ஹேம்நாத் கொடுத்த தொல்லைகள் குறித்து அவருடன் பணியாற்றிய நண்பர்களிடம் சித்ரா தெரிவித்ததாக கூறப்படுவதால் தற்போது நடிகர் நடிகைகள், தொழிநுட்ப கலைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.
அவர்களை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்ப்பதற்கு பொலிஸார் முயற்சி எடுத்து வருகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேம்நாத்தை ஆர்.டி.ஓ விசாரணைக்காக அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளனர்.
ஹேம்நாத் கொத்தாக தொல்லைகள் தந்தாலும், சிரித்த முகத்துடன் சித்தாக வலம் வந்த சித்ராவின் தற்கொலை தொடர்பான விசாரணை முடிவில் தடயங்களை மறைத்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!