சின்னஞ்சிறு இளவரசி சார்லொட்டிற்கு ஆடை மாற்றி பால் புகட்டிய எலிஸபெத் மகாராணி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கத்தரீன் தம்பதிக்கு புதிதாக பிறந்த புதல்வியான இளவரசி சார்லொட்டை, அவரது பூட்டியான எலிஸபெத் மகாராணியார் வழமையான பூட்டிமார் போன்று பராமரித்தால் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அரச குடும்ப அங்கத்தவர்கள் போன்ற தோற்றத்தைக் கொண்ட நடிகர்களைப் பயன்படுத்தி எடுத்து அந்நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான அலிஸன் ஜக்ஸன் வெளியிட்டுள்ளார்.
எலிஸபெத் மகாராணியார் சின்னஞ்சிறு இளவரசி சார்லொட்டிற்கு உள்ளாடைத் துணியை மாற்றுவது, போத்தல் பாலைப் புகட்டுவது போன்ற காட்சிகளை இந்த புகைப்படங்கள் உள்ளடக்கியுள்ளன.
மேற்படி புகைப்படங்களில் மகாராணியார், இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ஜ் சீமாட்டி கத்தரீன், இளவரசர் ஜோர்ஜ் மற்றும் இளவரசி சார்லொட் ஆகியோரைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அவர்களைப் போன்ற உருவத் தோற்றத்தைக் கொண்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.
எலிஸபெத் மகாராணியார் தனது பூட்டக் குழந்தையான சார்லொட்டை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கென்ஸிங்டன் மாளிகையில் முதன்முதலாக சந்தித்தார். அவர் சின்னஞ்சிறு இளவரசியுடன் சுமார் 20 நிமிடங்களை கழித்தமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!