இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
வெளியேறிய அதிபர்
முன்னதாக சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் நுழைவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
"எங்கள் படைகள் டமாஸ்கஸுக்குள் நுழைய தொடங்கிவிட்டன", என்று தங்களின் டெலிகிராம் செயலி கணக்கில் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.
"ஒவ்வொரு பகுதியாக டமாஸ்கஸ் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிக்கொண்டு வருகின்றனர்", என்று பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமாக சிபிஎஸ்ஸிடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
ஹோம்ஸ் நகரை "முழுமையாக விடுவித்த" பிறகு டமாஸ்கஸ் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் வந்தனர்.
இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இதனை ஒரு "வரலாற்று சிறப்பு மிக்க தருணம்" என்று விவரித்துள்ளது.
இதனையடுத்து, சிரிய அதிபர் பஷார் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு விமானத்தின் மூலம் புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இரண்டு சிரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானத்தில் அதிபர் அசாத் ஏறி சென்றிருக்கலாம் என்றும் விமானம் புறப்பட்ட பின்னர், விமான நிலையத்தில் இருந்த சிரிய அரசின் பாதுகாப்புப் படைகள் வெளியேறினர் என்றும் தி சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் தெரிவித்தது.
சிரியா: டாமஸ்கஸ்
சிரிய அதிபர் பஷர் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு புறப்பட்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது
மேலும் டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
கிளர்ச்சியாளர்களின் படைகள், பார்சேவுக்கு அருகே இருப்பதாகவும், அங்கு மோதல்கள் நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, இணைய சேவை மிகவும் குறைவாக உள்ளது, மக்கள் தங்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்", என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
"மிகவும் சத்தமாக துப்பாக்கிச் சூடு நடந்தது அது எங்கிருந்து வருகிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை", என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அப்பகுதியில் வசிக்கும் இருவரை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் என்ன நடக்கிறது?
சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை கிளர்ச்சிக்குழுக்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கின.
சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham- HTS)' தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.
ஏற்கனவே கடும் பதற்றம் நிலவி வந்த சூழலில், கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அலெப்போ மற்றும் தலைநகர் டமாஸ்கஸுக்கும் நடுவே ஹமா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியினை டிசம்பர் 5-ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
இது அதிபர் அசாத்திற்கு இரண்டாவது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது.
மேலும் கிளர்ச்சிபடைகள் ஹோம்ஸ் நகரையும், தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து அவர்கள் இன்று (டிசம்பர் 8) தலைநகர் டாமஸ்கஸையும் கைப்பற்றியுள்ளனர்.
2011 இல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தெற்கில் புரட்சி தொடங்கியது. அதைத் தொடந்து, அங்கு அமைதியின்மை நிலவத் தொடங்கியது.
ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்குதலை தொடங்கியதில் இருந்து, சிரியாவின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு யார்?
2011 இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக 'ஜபத் அல்-நுஸ்ரா' (Jabhat al-Nusra) என்ற வேறு பெயரில் 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' அமைக்கப்பட்டது.
இஸ்லாமிய அரசு (IS) என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ராவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.
சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொடிய குழுவாக இது கருதப்பட்டது.
ஆனால் அதன் புரட்சிகரக் கொள்கையை விட, 'ஜிஹாதி சித்தாந்தம்' அக்குழுவின் உந்து சக்தியாக கருதப்படுகிறது.
2016-ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகப் பிரிந்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.
ஒரு வருடம் கழித்து, இதே போன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற பெயரை இக்குழுப் பெற்றது.
- இது, பிபிசி நியூஸ்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!