news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் பதிவு

12 Mar, 2025
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிகளவிலான முறைப்பாடுகள் சிறுவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பானவை ஆகும். இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் செயல்கள் தொடர்பில் 332 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதேவேளை, சிறுவர்களின் கல்வி உரிமை மீறப்படுவது தொடர்பில் 279 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!