news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் கைதிகளை துப்பாக்கி முனையில் படகில் ஏற்றிய காவலர்கள்

29 Nov, 2025
திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அனுராதபுரத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் அங்குள்ள சிறைச்சாலைக்குள் புகுந்தது. இதன் காரணமாக, அந்த சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர். இலங்கை காவல் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கைதிகள் மார்பளவு நீரில் நடந்து சென்று படகில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது. இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று காலை (நவ.29 சனிக்கிழமை) வரை நாடளாவிய ரீதியில் சுமார் 123 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 133 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனார்த்த முகாமைத்துவ நிலையம் கூறுகிறது. சுமார் 60-70 கிலோமீற்றர் வேகத்துடன் வடக்கு மாகாணம் நோக்கி நகர்ந்த புயலானது, வன்னி மாவட்டத்தில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளநீரின் வரத்து அதிகரித்தமை காரணமாக, கிளிநொச்சியில் அமைந்திருக்கும் இரணைமடுக் குளத்தின் அனைத்து (12) வான் கதவுகளும் நேற்று திறக்கப்பட்டமையைத் தொடர்ந்து தாழ் நிலப்பரப்பில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பு நிமித்தம் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாகத் திரட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சுமார் 1000க்கும் அதிகமான கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விளம்பரம் இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் பாதிப்புகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பாதிப்புகளின் அளவு நொடிக்கு நொடி அதிகரித்து வருகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!