சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த செல்லப்பனேந்தலைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி. ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.
இவரின் மகள் சுபிக்ஷா (15). மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்குச் செல்லவிருந்தார்.
மாணவி சுபிக்ஷா தினமும் மதுரைக்கு அரசுப் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். பள்ளி மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட வெவ்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு நபர்களிடம் பாராட்டு பெற்றிருக்கிறார்.
இவர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி மதுரை மாவட்ட அளவில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையால் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் சரிவரப் புரியவில்லை என்று பெற்றோரிடம் சொல்லி வந்திருக்கிறார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால், தொடக்கத்திலிருந்தே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்திருக்கிறார்.
பொதுத்தேர்வில் வெற்றி பெற முடியாமல் போய்விடுமோ, மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற மனக் கவலையில் இருந்த அவர், தன் தாயாரின் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!