தி ஹண்ட் (The Hunt) தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?
24 Aug, 2026
படக்குறிப்பு, இந்த வளாகத்தில் 63 பெண்களின் கல்லறைகளைத் தவிர, இன்னும் ஒரு கல்லறை காலியாக உள்ளது என்று ஹென்ரி கசின்ஸ் குறிப்பிடுகிறார்.
மனைவிகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ய முடிவு
ஜோதிடர்களின் கணிப்புகளை நம்பிய அஃப்சல் கான், தான் போருக்கு புறப்பட்டுச் சென்ற ஆண்டை தனது இறந்த தேதியாக தன் கல்லறையில் எழுதினார்.
பிஜாப்பூரை விட்டு வெளியேறும் போது அஃப்சல் கானும் அவரது கூட்டாளிகளும் தாங்கள் திரும்பி வர மாட்டோம் என்ற எண்ணத்துடன் கிளம்பியதற்கு இதுவே காரணம்.
இதன் காரணமாகவே அவர் தன் ”மனைவிகளை நீரில் மூழ்கடித்து கொல்ல முடிவு செய்தார்” என்று அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
போரில் இறந்த பிறகு வேறு யாருடைய கையிலும் அவர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அஃப்சல் கான் தனது மனைவிகள் அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் தள்ளிவிட்டதாக வரலாற்றாசிரியர் லட்சுமி ஷரத் 'தி இந்து' நாளிதழில் எழுதியுள்ளார்.
"அவரது மனைவிகளில் ஒருவர் தப்பிக்க முயன்றார். ஆனால் அவரும் பின்னர் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்,” என்று அவர் எழுதுகிறார்.
இந்த வளாகத்தில் 63 பெண்களின் கல்லறைகளைத் தவிர, இன்னும் ஒரு கல்லறை காலியாக உள்ளது என்று ஹென்ரி கசின்ஸ் குறிப்பிடுகிறார்.
"ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு பெண்கள் உயிர் தப்பியிருக்கக் கூடும். காலி கல்லறை இதைக் குறிக்கிறது," என்று அவர் எழுதுகிறார்.
"அஃப்சல் கானின் இந்தப் படையெடுப்பு பற்றிய பல கதைகள் பிற்காலத்தில் பிரபலமடைந்தன," என்று வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்க்கார் கூறுகிறார்.
"அந்தக் கதைகளில் இதுவும் ஒன்று, சிவாஜிக்கு எதிராக அஃப்சல் கான் தனது படையெடுப்பை மேற்கொள்வதற்கு முன்பு, அவர் போரில் இருந்து உயிருடன் திரும்ப மாட்டார் என்று ஜோதிடர் ஒருவர் கணித்ததாகக் கூறப்படுகிறது."
"எனவே, அவர் தனது 63 மனைவிகளையும் பிஜாப்பூருக்கு அருகிலுள்ள அஃப்சல்புராவில் கொன்றார். தான் இறந்த பிறகு அவர்கள் வேறு யாரிடமும் சிக்கக் கூடாது என்பதற்காகவே இதைச்செய்தார்,” என்று ஜாதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.
கர்நாடகாவின் பிஜாப்பூரில் உள்ள அலாமின் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தின் நடுவில் ஒரு மேடையில் ஏழு வரிசைகளில் ஒரே மாதிரியான பல கல்லறைகள் உள்ளன.
உள்ளூர் மக்கள் அதை 'ஸாட் கப்ரு’( அறுபது கல்லறைகள்) என்று கூறுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர் முகமது அனிசுர் ரஹ்மான் கான் கூறுகிறார்.
"இந்த கல்லறைகள் அனைத்தும் அஃப்சல் கானின் மனைவிகளுடையது. அவர் சிவாஜியுடன் போருக்குக்குச் செல்வதற்கு முன்பு தன் மனைவிகளை கொன்றார்.
தான் இறந்த பிறகு தன் மனைவிகளை வேறு யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு செய்தார்,” என்று அனிசூர் ரஹ்மான் கானின் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
படக்குறிப்பு, அஃப்சல்கான் புதைக்கப்பட்ட இடம்
அஃப்சல் கான் தனது மனைவிகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். ஆனால் அவர் போரிலிருந்து திரும்பவில்லை.
"இங்கு 60 கல்லறைகள் உள்ளன என்பது மக்களிடையே நிலவும் கருத்து. ஆனால் இது உண்மையல்ல. ஏனெனில் இங்கு மொத்தம் 64 கல்லறைகள் உள்ளன.
அவற்றில் ஒன்று காலியாக உள்ளது," என்று அனிசுர் ரஹ்மான் கான், முகமது ஷேக் இக்பால் சிஷ்டியை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.
"இந்த மயானம் அரச குடும்பத்துப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கலாம். அந்தக் காலத்தில் போர் என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. இருந்த போதிலும் ஒரு தளபதி எப்படி இப்படிப்பட்ட அறியாமை நிறைந்த கோழைத்தனமான நடவடிக்கையை எடுக்க முடியும்?" என்று அனிசுர் ரஹ்மான் கான் எழுதுகிறார்,
இந்தக் கல்லறைகளுக்குப் பின்னால் இருக்கும் இந்தக் கதையை லக்ஷ்மி ஷரத் நம்புகிறார்.
"கருப்புக் கல்லால் ஆன இந்தக் கல்லறைகள் சேதமடையாமல் உள்ளன. சிலவற்றின் கற்கள் உடைந்துள்ளன.
அங்கு ஒரு விசித்திரமான அமைதி நிலவுகிறது. சாவின் வாயில் தள்ளப்பட்ட அந்தப் பெண்களின் கடைசி அலறல்கள் அங்கு எதிரொலிப்பதுபோல உள்ளது. நான் அங்கு ஒரு நடுக்கத்தை உணர்ந்தேன்," என்று லக்ஷ்மி ஷரத் கூறுகிறார்.
"உண்மையில் அஃப்சல் கான் தனது மனைவிகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். ஆனால் அவர் போர்க்களத்திலிருந்து திரும்பவில்லை," என்று அவர் மேலும் எழுதுகிறார்.
"அஃப்சல் கான் அரண்மனையின் இடிபாடுகளுக்கு வடக்கே அமைந்துள்ள அவரது கல்லறை காலியாகவே உள்ளது." என்று கஸின்ஸ் குறிப்பிடுகிறார்.
"அஃப்சல் கான் சிவாஜியால் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் பிரதாப்கரில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது உடல் பிஜாப்பூரில் கட்டப்பட்ட கல்லறைக்கு கொண்டு செல்லப்படவில்லை." என்று அவர் மேலும் கூறுகிறார்.
சிவாஜியின் கைகளில் அஃப்சல் கான் இறந்தது இந்திய வரலாற்றில் ஒரு சுவாரசியமான அத்தியாயம். சிவாஜி, ’புலி நக’ ஆயுதத்தால் அஃப்சல் கானைக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!