'நடிகராக விரும்பவில்லை' மென்பொருள் பொறியியலாளராகவே விரும்பினேன் - ஷாருக்கான் (வீடியோ)
பொலிவூட் சுப்பர் ஸ்டார்களில் ஒருவராக விளங்கும் ஷாருக்கான், தான் ஒரு மென்பொருள் பொறியியலாளராகுவதற்கே விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக ஐ.ஐ.ரி நுழைவுத் தேர்வையும் அவர் எழுதினாராம்.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னையில் பிறந்த தமிழரான சுந்தர் பிச்சையுடன் இணைந்து முன்னர் நடத்திய கலந்துரையாடலொன்றிலேயே இதை ஷாருக்கான் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் தனது ஹெப்பி நியூ இயர் படத்தின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக ஷாருக்கானும் அப்படக் குழுவினரும் அமெரிக்காவுக்கு சென்றிருந்தனர்.
உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள ஷாருக்கானுக்கு கூகுள்களிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்திலுள்ள கூகுள் தலைமையகத்துக்கும் ஷாருக் கான் அழைக்கப்பட்டு கூகுள் ஊழியர்களுடனான கலந்துரையாடலில் பங்குபற்றினார்.
அப்போது கூகுளின் தயாரிப்புகள் பிரிவுக்கு தலைவராக இருந்த சுந்தர் பிச்சை (சுந்தரராஜன் பிச்சை) அந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.


கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!