38 பேரை கொன்று தின்ற கொடூரக் கொலைக்காரன்
27 Oct, 2026
பதற்றத்தில் உலக நாடுகள் சீனாவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக நாடுகள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ஜப்பான் இது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் தாம் பெறவில்லை என்று கூறியதோடு, இது அதிக கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிராந்தியத்தைத் தவறாக மதிப்பிடுவதால் உருவாகும் சிக்கல்களை இது அதிகப்படுத்துகிறது என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது. மேலும் இந்தச் சோதனை ஓட்டத்திற்கான விளக்கத்தை சீனாவிடம் கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. இது தேவையற்றது என்றும், கவலை அளிக்கக் கூடிய நிகழ்வு என்றும் நியூசிலாந்து கூறியுள்ளது. சீனா ஒரு அரசியல் செய்தியை அளிப்பதற்காக இதை மேற்கொண்டுள்ளது என்பதை நம்பவில்லை என்று பாண்டா கூறுகிறார். ஆசியாவில் தங்களின் அணு ஆயுத நிலைப்பாட்டை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளும் அமெரிக்காவுக்கும், இந்தப் பிராந்தியத்திலும் இது ஒரு தெளிவான நினைவூட்டலாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு ஒரு அழைப்பு மணியாக இந்தச் செயல் இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் இந்தச் செயல்பாடு, தைவான் தொடர்பான விவகாரங்களில் தலையீடு நிகழும் பட்சத்தில் உங்கள் நாடும் தாக்குதலுக்கு ஆளாகும் பலவீனமான நிலையில் தான் இருக்கிறது என்று செய்தியை அமெரிக்காவுக்குக் கடத்துவதாக இருக்கிறது என்று தென்கொரியாவில் உள்ளா எவா பெண்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் லெய்ஃப்-எரிக் ஏஸ்லே கூறுகிறார். ஆசியாவில் உள்ள அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கு, ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதலை நடத்துவதற்கான திறன் தன்னிடம் இருப்பதை நிரூபிக்க இந்தச் சோதனையை சீனா நடத்தியுள்ளது என்றும் அவர் கூறுகிறார். இது நடந்திருக்கும் நேரம் தான் முக்கியம் என்று கூறுகிறார் சிங்கப்பூரில் உள்ள ராஜரத்தினம் சர்வதேச விவகாரங்கள் துறை பள்ளியில் ஆராய்ச்சியாளராக இருக்கும் ட்ரூ தாம்சன். "சீனா தன்னுடைய அறிக்கையில் எந்த நாட்டையும் இலக்காக வைத்து இதனை நடத்தவில்லை என்று கூறுகிறது. ஆனால் இந்தச் சோதனை ஓட்டம் சீனா, மற்றும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான் இடையே அதிக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று கூறுகிறார் அவர். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு கடந்த ஆண்டு மேம்பட்டு வந்த நிலையில் இந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது சீனா. கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய இடங்களில் தொடர்ந்து சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினரின் படகுகள் மோதிக்கொள்வது இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம், சீனாவின் உளவு விமானம் ஒன்று ஜப்பானின் எல்லைக்குள் உலவியதாகக் குற்றம்சாட்டிய ஜப்பான் அந்த நடவடிக்கையை துளியும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று குற்றம்சாட்டியிருந்தது.கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள்
500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள சீனா
சீனாவுடனான தைவானின் உறவும் இந்தப் பதற்றத்திற்கு மற்றொரு காரணம்.
தைவானின் பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை அன்று சீனா நடத்திய சோதனை ஓட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தைவானைச் சுற்றி 23 சீன ராணுவ விமானங்கள் செயல்பட்டு வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடுருவல்களை நியாயப்படுத்தும் வகையில் ‘கிரே ஸோன் வார்ஃபேர்’ என்ற பெயரில் தைவானின் நீர்வழிகள் மற்றும் வான்வெளியில் சீனா தொடர்ச்சியாகக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி வருகிறது.
தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கியதால் ஜூலையில் சீனா அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்தது.
அமெரிக்காவைக் காட்டிலும் சீனா குறைவாகவே ஆயுதங்களை வைத்திருக்கும் போதும், கடந்த ஆண்டு சீனாவின் ஆயுதங்களை நவீனப்படுத்தும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.
அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அலுவலகமான பெண்டகன், சீனாவின் அணு ஆயுத கிடங்களில் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அவற்றில் 350 ஆயுதகங்கள் தொலைதூர ஏவுகணைகள் என்றும் மதிப்பிட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,000-ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவும் அமெரிக்காவும் 5,000-க்கும் மேலே இத்தகைய ஆயுதங்களை வைத்துள்ளது.
அணு ஆயுதக் கிடங்கை மேற்பார்வையிட்டு வரும் சீனா பாதுகாப்புத்துறையின் ராக்கெட் படையிலும் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்தப் படையின் இரண்டு தலைவர்கள் பணி இழப்புக்கு காரணமாக அமைந்தன.
பிபிசி தமிழ்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!