இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
புபோனிக் தொற்றின் தீவிரத்தை நான்கு கட்டங்களாக அதிகாரிகள் அளவிடுகின்றனர். அந்த வகையில் தற்போது மூன்றாம் கட்ட எச்சரிக்கை மக்களுக்கு விடப்பட்டுள்ளது.
இந்த புபோனிக் தொற்றானது பாக்டீரியாக்கள் மூலமாக வரக்கூடியவை. இவை மோசமானவை என்றாலும் தற்போதைய அறிவியல் வளர்ச்சியில், இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஆண்டிபயாட்டிக் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புபோனிக் தொற்றின் அறிகுறிகள் ஃபுளூ காய்ச்சல் போலவே இருக்கும். எனவே இதனை முதலிலேயே கண்டறிவது மிகக் கடினம். இதன் அறிகுறியானது தொற்று ஏற்பட்டு 3 முதல் 7 நாட்களுக்குள் தெரிய வரும்.
புபோனிக் தொற்று கருப்பு மரணம் என அழைக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் இந்த தொற்று பல கோடி மக்களைக் கொன்று குவித்திருப்பதால் அது இந்த பெயரால் அழைக்கப்படுகிறது.
பதினான்காம் நூற்றாண்டு
2017ஆம் ஆண்டு மடகாஸ்கரில் இந்த தொற்றால் 300க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 30க்கும் குறைவானோரே பலியானதாக மருத்துவ சஞ்சிகை லாண்செட் கூறுகிறது.
14 -ஆம் நூற்றாண்டில் இந்த நோய் உலகம் முழுக்க பரவி ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் சுமார் ஐந்து கோடி பேரை கொன்று குவித்தது.
1665-ஆம் ஆண்டு லண்டன் நகரை தாக்கிய இந்த நோய், அந்நகரில் வசித்த ஐந்தில் ஒரு பங்கு மக்களைக் கொன்றது. 19 நூற்றாண்டில் சீனா மற்றும் இந்தியாவில் பரவிய இந்த பிளேக் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1.2 கோடியாகும்.
"14ஆம் நூற்றாண்டுபோல இல்லாமல், இந்த நோய் எப்படிப் பரவுகிறது என்பதற்கான புரிதல் நம்மிடம் இப்போது உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்து நமக்கு இப்போது தெரியும். நன்கு செயல்புரியும், நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் மூலமாக, பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் நாம் குணப்படுத்தியுள்ளோம்." என்று ஹெல்த்லைன் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார், ஸ்டான்ஃபோர்ட் ஹெல்த் கேர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், சாந்தி கப்பகோடா.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!