நேற்று ஏற்பட்ட உயிரிழப்புகள் வுஹான் நகரை தலை நகராகக் கொண்ட ஹுபேய் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன. எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சீனாவில் நேறறுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கியவர்களின் எண்ணிக்கை 14,380 ஆக அதிகரித்துள்ளதாகவும் சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதுவரை சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்றுடைய சுமார் 100 பேர் கண்டுபி;டிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் அண்மைய நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றுடையோர் கண்டுபிடிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சினாவின் ஹுபேய் மாகாணத்தில் சீன புதுவருட கால விடுமுறை பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்றுடையோர் எண்ணிக்கை

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!