என்விடியா CEO மூலம் சீனாவிற்கு செக்! டபுள் கேம் ஆடிய அமெரிக்கா? உலகையே அதிரவைக்கும் CIA பின்னணி!
25 Nov, 2026
வெளியேற்றப்படும் ஹு ஜின்டாவ்.
பிறகு அவர் அவரது கைகளைப் பற்றி அழைத்துச் சென்றார். தயக்கத்துடன் அவருடன் நடக்கத் தொடங்கிய ஹு, ஷி ஜின்பிங் பக்கம் சாய்ந்து ஏதோ கேட்டார். அதற்கு 'ஆம்' என்பதைப் போல ஷின்பிங் தலையசைத்தார்.
பிறகு ஹு ஜின்டாவ், மக்கள் பேரரங்கம் என்ற அந்த அரங்கில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னதாக சனிக்கிழமை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்கு 205 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சீன அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்துக்கு பிரதிநிதிகள் இசைவு வழங்கினார்கள்.
அதிபர் ஷி ஜின்பிங்கின் கருத்துகளை சீனாவின் எதிர்காலத்துக்கான வழிகாட்டுக் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளும் திருத்தம் அது.
ஹாங்காங் - தைவான் குறித்து
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பேசிய ஷி ஜின்பிங், ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு இயக்கத்தை நசுக்கிய செயலை ஆதரித்துப் பேசினார். குழப்பத்தில் இருந்து விடுபட்டு, ஆட்சியை நடத்திய நிகழ்வு என்று அதனை அவர் விவரித்தார்.
சுயாட்சி நடக்கும் தைவானை பலப்பிரயோகம் செய்து பிடிக்க தங்களுக்கு உரிமை இருப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பதவி, நாட்டின் அதிபர் பதவி, நாட்டின் ராணுவப் படைகளின் தலைவர் பதவி ஆகியவற்றை ஷி தற்போது ஒன்றாகப் பெற்றுள்ளார். தற்போது ஷி அதிஉயர் தலைவர் என்பதாக அழைக்கப்படுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் மூன்றாவது முறையாக உறுதி செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இதையடுத்து அவர் மூன்றாவது முறையாக ஆட்சித் தலைவர் அல்லது அதிபர் பொறுப்பில் தொடர்வார்.
அதிபர் பதவியில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அவர் 2018ம் ஆண்டு நீக்கினார்.
இதையடுத்து காலவரையறை இல்லாமல் தொடர்ந்து அதிபராக பதவி வகிக்க அவருக்கு வழி பிறந்தது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!