திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முதற்கட்டமாக முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தேன். அடுத்து கல்முனை பகுதியில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று தகவல்களை வழங்கி இருந்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் அங்கு மேற்கொள்ளவில்லை என கூற விரும்புகின்றேன்.
எனது முயற்சியை கைவிடாது அம்பாறை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில் மகனை தேடி அலைந்தேன். மிகுந்த நம்பிக்கையுடன் எனது மகனின் சிறுபாராய புகைப்படத்தை தேடி எடுத்து மனநோயாளி போன்று தெரிந்தவர்கள் முதல் தெரியாதவர்கள் வரை கேட்டறிந்து மகன் இருக்கும் பாடசாலையை கண்டறிந்தேன்.
சிங்கள பாடசாலை ஒன்றில் நான் பெயரிட்ட மகன் அதே பெயருடன் அப்பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். அங்கு அதிபரை அணுகி இரகசியமாக எனது மகனின் விடயத்தை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை அவமதித்து வெளியேற்றினார்.
எனது மகனை வளர்த்து வந்தவர்களுக்கு விடயம் தெரிய வந்தது. இருந்தாலும் எனது முயற்சினை கைவிடாது பொருள் வியாபாரி மற்றும் ஆடை வியாபாரி போன்று வேடமிட்டு மகன் வளர்க்கப்பட்டு வந்த வீட்டினை அடையாளப்படுத்திக் கொண்டேன். இருந்த போதிலும் மகனை அடைந்து கொள்ள பல்வேறு மட்டங்களை சந்தித்து உதவிகளை கேட்டேன். ஜனாதிபதி செயலகத்திற்கும் கூட கடிதம் ஒன்றினை எழுதி இருந்தேன். இருந்தும் பதில் எதுவும் கிடைக்கவில்லை.
உடனடியாக எனது மகனை சென்று பார்வையிட்டு நான் தான் தாய் என்னுடன் வருகின்றாயா என வளர்த்தவரின் வீட்டிற்கு சென்று மகனிடம் கேட்டேன். உடனே மகன் என்னுடன் வர சம்மதித்தார். உடனே எனது வீட்டிற்கு கூட்டி வந்தேன். சந்தோசமாக இருக்கின்றேன். அல்லாஹ் என்னை கைவிடவில்லை. எனது மகனை 16 வருடங்களுக்கு பின்னர் அடைந்து விட்டேன். இன்று எனது மகன் ஹிந்தி நடிகர் போன்று வளர்ந்திருக்கின்றார் என 5 வயதில் காணாமல் சென்ற றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் (வயது-21) என்பவரின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
இவ்வாறு கூறி முடிந்த பின்னர் தனது மகனை வளர்த்தவர்கள் எப்போது எந்த நேரமும் மகனை சந்தித்து பார்ப்பதற்கு வருகை தந்தாலும் நான் ஆட்சேபனை செய்ய போவதில்லை என மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!