கொள்ளைச் சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் கொடுத்த மயக்க மருந்தினால் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழப்பு - மட்டக்களப்பில் சம்பவம்
30 Oct, 2026
சுனாமி ஏற்பட்ட அன்றைய தினம் மருதானையிலிருந்து சுமார் 1700 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த புகையிரதம் பெரெலிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இதன்போது புகையிரதத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது உயிரிழந்த பொது மக்கள் மற்றும் புகையிரத ஊழியர்களுக்கு காலி - பெரெலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த விபத்தில் சேதமடைந்த 591 என்ற இலக்க எஞ்சினுடன் இன்று காலை 6.50க்கு பெரேலிய நோக்கி புகையிரதம் பயணமானது. விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள், புகையிரத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பயணத்தில் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர மலையகத்தின் பல பகுதிகளிலும், கொழும்பு, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அன்று குறித்த புகையிரதத்தின் கட்டுப்பாட்டாளராக செயற்பட்ட ஓய்வுபெற்ற கட்டுப்பாட்டாளர் வணிகரத்ன கருணாதிலக தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார் :
'குறித்த புகையிரத விபத்தில் அதன் சாரதி மற்றும் அவரது உதவியாளரும் உயிரிழந்துவிட்டனர். விபத்தில் சிக்கிய ஒரு சிலரை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்தமை நினைவிருக்கிறது. இருபது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த பேரலையால் ஏற்பட்ட அழிவுகள் சிறிதளவும் நினைவில் இருந்து நீங்கவில்லை' என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!