Belonging: A Journey of Love’ - இத்தாலிப் பெண் இந்தியாவின் மகளான கதை!
22 Nov, 2026
ஊரடங்கை மீறி வெளியே வந்த குஜராத் அமைச்சரின் மகனை பெண் காவலர் ஒருவர் எச்சரிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அமைச்சரின் மகன்
குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. அவர்களை சூரத் போலீஸ் நிலைய பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தினார்.கைது
சமூக ஊடகங்களில் அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், சுனிதாவிற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. இந்த சூழலில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்கிறது பிடிஐ செய்தி முகமை. அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 (சட்டத்தை மீறியது), இந்திய தண்டனை சட்டம் 269, 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை பரப்புவது )உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வைரல் காணொளியை பார்க்க: <>குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் மகனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த பெண் காவலர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!